மாயநதி போல ஒரு திரைப்படம் மீண்டும் வேண்டும் ரசிகர்கள் கருத்து
Recommended Video
சென்னை: இது போன்ற ஒரு படம் வேண்டும் ரசிகர்கள் கருத்து.
கடந்த வாரம் வெளியாகி தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் மாயநதி.
இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தது மற்றும் படத்தில் நடித்த நடிகர்கள் எல்லோரையும் விட அதிக வரவேற்பு கிடைத்தது இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் அசோக் தியாகராஜன் அவருக்கு தான்.

ஒரு படத்தை இயக்கி அதனை தயாரித்து ரீலிஸ் செய்வது கடினம் தனி ஒரு மனிதனாக இருந்து படத்தை இயக்கி தயாரித்து வெளியிட்டு அதில் வெற்றியும் கண்டுள்ளார் அசோக் தியாகராஜன்.
தனது கல்லூரி காலத்தில் கவிதைகள் பல எழுதி பல விஷயங்களை தெரிந்து கொண்டு சினிமாவின் மேல் கொண்ட திரா காதலால் இயக்குனர் ஆனார். இவர் ஒரு மருத்துவர் என்பது முக்கியமாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

தனது முதல் திரைப்படத்திலே அனைவரும் வெற்றியை பெற மாட்டார்கள் ஆனால் இவர் தனது முதல் படத்திலேயே தனி முத்திரை பதித்துவிட்டார் என்று தான் கூறவேண்டும்.
இவரது படங்களை பலரும் பார்த்து இவரை பாராட்டியுள்ளனர் மற்றும் இவரின் படத்தை பார்க்கையில் முதல் படம் இயக்குவது போல தெரியவில்லை. ஏதோ பத்து படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார் என்பது போல தான் திகழ்கிறது இவரின் மாயநதி திரைப்படம்.

அசோக் தியாகராஜன் இந்த கதாபாத்திரத்திற்கு இவர் தான் சரியாக இருப்பார் என்று கேஸ்டிங் செய்த விதம் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை செலக்ட் செய்த விதம் என அனைத்தும் பாராட்டும் விதமாகவே இருந்தது.
படம் வெளியாகி என்ன தான் ஒருவாரம் ஆகி இருந்தாலும் இப்படத்துடன் வேறு படம் ரீலிஸ் ஆகி இருந்தாலும் மாயநதி ஜொலிக்க தவறவில்லை. வசூல் குவித்து தான் வருகிறது இத்திரைப்படம் மற்றும் இயக்குனரை இது போன்ற ஒரு படத்தை விரைவாக எடுத்து வெளியிடுங்கள் என்று ரசிகர்கள் இவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தனது முதல் திரைப்படத்திலே சமுகத்திற்கு ஏற்ற தேவையான ஒரு கருத்தை கூறியுள்ளார் இயக்குனர் அசோக் தியாகராஜன். இவரது சேவை கலைக்கு தேவை.


Click it and Unblock the Notifications











