அப்பா - மகள் பாசத்தை அழகாக சொல்லி இருக்கிறது மாயநதி.. மக்கள் மத்தியில் குவிகிறது பாராட்டு!

By Staff

சென்னை: அபி சரவணன், வெண்பா, இளவரசு, ஆடுகளம் நரேன் ஆகியோர் நடித்து அசோக் தியாகராஜன் இயக்கி தயாரித்து இருக்கும் படம் மாயநதி.

இப்படத்திற்கு இளையராஜாவின் மகள் பவதாரணி இசை அமைத்துள்ளார். ஜனவரி 31ம் தேதி வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

Mayanadhi film which released yesterday gaining people attention everywhere

படம் வெளியானது முதல் தற்போது வரை படத்திற்கு பாசிட்டிவ் ஆன விமர்சனங்களே அதிகம் கிடைத்து வருகின்றன.

படத்தை பற்றி சற்று அலசி பார்த்தால் படத்தில் ஒரு நெகட்டிவ் ஆன விஷயம் ஒன்று கூட இல்லை அதுவே படத்திற்கு ப்ளஸ். இது போன்ற ஒரு படத்தை எடுக்க பலரும் தயங்குவர். ஆனால் படத்தை இயக்கி தயாரித்த மருத்துவர் அசோக் தியாகராஜனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

அடுத்து, படத்தில் நாம் பார்க்க வேண்டியது படத்தின் ஹீரோ அபி சரவணனை தான். பலரும் தங்களது கதாபாத்திரத்திற்காக இரவு பகல் பாராமல் உழைப்பார்கள். அபியும் அதில் அடங்கும் ஒருவர் தான். இப்படத்திற்காக தனது நண்பனிடம் சென்று ஆட்டோ ஓட்ட கற்றுக் கொண்டு நடித்துள்ளார்.

அழகான வார்த்தையான வெண்பா எனும் பெயர் கொண்ட நடிகை தமிழ் படத்திற்கு கிடைத்த அழகான நடிகை. இந்த வெண்பா படத்தில் பார்ப்பதற்கு அச்சு அசல் பள்ளியில் படிக்கும் மாணவி போலவே வருகிறார்.

ஒரு மகள் தனது அப்பாவிடம் காட்டும் பாசத்தை அப்படியே காட்டி உள்ளார் வெண்பா. இப்படத்திற்கு பிறகு இவருக்கு அதிக திரைபடங்களில் வாய்ப்புகள் அவரது வாசல் தேடி வரும்.

ஆடுகளம் நரேன் இவரை பற்றி சொல்லத் தேவையே இல்லை, வில்லன் வேடமானாலும் சரி, குணசித்திர வேடமானாலும் சரி, தனது நடிப்பால் தூக்கி சாப்பிட்டு விடுவார். இந்த படத்தில் ஒரு அன்பான அப்பாவாக நடித்து பாசத்தை பொழிந்துள்ளார்.

படத்தை பார்த்த சிலர், தங்கள் தந்தையை பார்த்த உணர்வை ஆடுகளம் நரேன் கொடுத்துள்ளார் என பாராட்டியுள்ளனர். இதுவே இந்த படத்திற்கு கிடைத்த வெற்றி.

அடுத்து படத்தின் இசை ராஜ பவதாரணி. தனது தந்தை இளையராஜாவின் ராஜாவை தூக்கி பெயருக்கு முன்னால் போட்டுக் கொண்டது போல, ராஜாவை போல இசையமைத்தும் உள்ளார். மாயநதி படத்திற்கு பவதாரணி இசை அமைத்தவிதம் மற்றும் பாடல்கள் அனைத்தும் பிரமாதம்.

தமிழ் சினிமாவில் நாம் அப்பா மற்றும் மகள் உடைய பாசத்தை பல படங்களில் பார்த்து உள்ளோம். அதில் மாயநதி படத்திற்கும் தனி இடம் உண்டு. வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள மாயநதி ஞாயிற்றுக் கிழமையான இன்றும் கல்லா கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X