டாக்டர் டூ டைரக்டர்.. சினிமா மீது தீராத காதல்.. மாயநதிக்காக பாரட்டப்பட வேண்டிய அசோக் தியாகராஜன்!

Recommended Video

Maayanadhi Theatrical Hit | Abi Saravanan | Venba | Adukalam Naren

சென்னை: சீனிமா மீது கொண்ட தீராத காதலால் டாக்டரான அசோக் தியாகராஜன் மாயநதி படத்தின் மூலம் டைரக்டர் ஆகியுள்ளார்.

தமிழகம் முழுவதும் கடந்த வாரம் வெளியான படம் மாயநதி. இந்தப் படத்தில் பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ள அபி சரவணன் மற்றும் வெண்பா ஆகியோர் லீடிங் ரோலில் நடித்துள்ளனர்.

மேலும் தேசிய விருது பெற்ற நடிகர் அப்புக்குட்டி, நரேன் ஆகியோரும் மாயநதி படத்தில் நடித்துள்ளனர். மாயநதி படத்திற்கு இசைஞானி இளையராஜாவின் மகளான ராஜா பவதாரினி இசையமைத்திருக்கிறார்..

கைராசி மருத்துவர்

கைராசி மருத்துவர்

அசோக் தியாகராஜன் இந்த படத்தை இயக்கி தயாரித்திருக்கிறார். மயிலாடுதுறையை சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவரான அசோக் தியாகராஜன் சினிமாவின் மீது கொண்ட தீராத காதலால் மாயநதி படத்தின் மூலம் தனது கனவை நிறைவேற்றியிருக்கிறார். மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதியில் கைராசியான மருத்துவர் என்ற பெயரை பெற்றவர் மருத்துவர் தியாகராஜன்.

பள்ளிக்கூட காதல்

பள்ளிக்கூட காதல்

சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் தனது மருத்துவ தொழிலுக்கு தற்காலிக விடுமுறை கொடுத்து மாயநதி படத்தை தொடங்கினார். மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் என பல இடங்களில் தனது மாயநதிக்கான படப்பிடிப்பை நடத்தினார் தியாகராஜன். பள்ளிப்பருவத்தில் வரும் அறியா காதல், பாலின ஈர்ப்பால் ஒரு மாணவியின் எதிர்காலம் எப்படி சீரழிகிறது என்பதை எதார்த்தமாக கூறியிருக்கிறார் அசோக் தியாகராஜன்.

கமிட்மென்ட்ஸ்

கமிட்மென்ட்ஸ்

எந்த எதிர்பார்ப்பும், உள்நோக்கமும் இல்லாமல், உள்ளதை உள்ளப்படி பெரிதுபடுத்தாமல் காட்டியிருக்கிறார் அசோக் தியாகராஜன். மேலும் தனது முதல் படம் என்ற சுவடே தெரியாதப்படி படத்தை கொடுத்திருக்கிறார். வேலை, குடும்பம், கமிட்மென்ட்ஸ் என பலரும் தங்களின் சிறு வயது கனவை கனவாக விட்டுவிட்டு கிடைக்கும் வேலையில் செய்யும் தொழிலில் கவனத்தை செலுத்து அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்து விடுகின்றோம்.

சமூக நலன்

சமூக நலன்

ஆனால் கைராசியான மருத்துவர் என்று சுற்று வட்டார மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றபோதும் தனது தொழிலுக்கு தற்காலிக விடுமுறை கொடுத்து தனது கனவை நிறைவேற்றியிருக்கிறார் அசோக் தியாகராஜன். மேலும் தனது முதல் படத்திலேயே சமூக நலன் சார்ந்த விஷயத்தையும் கையில் எடுத்திருக்கிறார்.

விவசாயப் பணி

விவசாயப் பணி

மருத்துவரான அசோக் தியாகராஜனுக்கு சினிமா மட்டுமின்றி விவசாயத்தின் மீதும் ஆர்வம் அதிகம். மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள தனது விவசாய நிலத்தில் விவசாயப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். அதன்மூலம் பலரும் பயன் பெற்று வருகின்றனர். தனது கனவு மற்றும் லட்சியத்திற்காக பலருக்கு வருமானத்தையும் வாழ்வாதாரத்தையும் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X