அபர்ணதி மிரட்டும் மாயபுத்தகம்... முதல் பார்வை போஸ்டர் வெளியிட்ட பிரபல இசையமைப்பாளர்

சென்னை : நடிகை அபர்ணதி, ஸ்ரீகாந்த், அசோக் இணைந்து நடித்துள்ள படம் மாயபுத்தகம்.

இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து விரைவில் ரிலீசாக உள்ளது.

இந்நிலையில் படத்தின் முதல் பார்வை போஸ்டரை பிரபல இசையமைப்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகை அபர்ணதி

நடிகை அபர்ணதி

நடிகை அபர்ணதி ஜெயில் படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவரது கேரக்டர் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது டீசர் உள்ளிட்டவற்றின்மூலம் தெரிகிறது. படத்தில் தனது இயல்பான நடிப்பை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

மாயபுத்தகம் படம்

மாயபுத்தகம் படம்

இந்நிலையில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் மாயபுத்தகம் படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளது. இந்தப் படத்தை ராம ஜெயப்பிரகாஷ் இயக்கியுள்ளார். நிறைய பேரை டெஸ்ட் செய்து அபர்ணதியை இந்த கதாபாத்திரத்திற்காக தேர்வு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

பாம்புகள் குறித்த கதை

பாம்புகள் குறித்த கதை

பாம்புகள் குறித்த கதைக்கருவை எடுத்து இந்தப் படத்தை இயக்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார். பாம்புகள் அதிகமான ஜென்மங்களை எடுக்கும் என்பதை மையமாக வைத்து கதைக்களம் உருவாகியுள்ளதாகவும் ப்ளாஷ்பேக்கில் வரும் கதையில் ஸ்ரீகாந்த் சிறப்பாக நடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிறைவடைந்த படப்பிடிப்பு

நிறைவடைந்த படப்பிடிப்பு

மேலும் படத்தில் அசோக் டைரக்டராக நடித்துள்ளதாகவும், பாம்புகள் குறித்த கதையை அவர் இயக்க முயற்சிப்பதாக கதை செல்லும் என்றும் இயக்குநர் ஜெயப்பிரகாஷ் தெரிவித்துள்ளார். தற்போது படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆன்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளார். அமானுஷ்யமான பங்களா பின்னணியில் இருக்கும் வகையில் இந்த போஸ்டரில் அபர்ணதி காணப்படுகிறார்.

விஜய் ஆன்டனி மகிழ்ச்சி

விஜய் ஆன்டனி மகிழ்ச்சி

பழங்காலத்து உடையில் அவர் இந்த போஸ்டரில் காணப்படுகிறார். அவருக்கு பின்னால் அதிகமான பாம்புகளும் காணப்படுகின்றன. இதனிடையே, மிகவும் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ள இந்தப் படத்தின் போஸ்டரை வெளியிடுவது குறித்து விஜய் ஆன்டனி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X