உறுதியானது மாயவன் 2ம் பாகம்.. கதையெழுத தொடங்கினார் C.V. குமார்
சென்னை: சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி, ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த படம் மாயவன்.
இந்த படத்தை C.V. குமார் இயக்கி, தயாரித்திருந்தார். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைப்பாளராகப் பணிபுரிந்தார்.
தற்போது இந்த படத்தின் 2ம் பாகத்தை இயக்கி, தயாரிக்க முடிவு செய்துள்ளார் சி.வி.குமார். அதிகாரபூர்வமாக அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

பெரிய பொருட்செலவில்
பிரபல தயாரிப்பாளரான C.V. குமார் இயக்குனராக அறிமுகமான படம் மாயவன். 2017ம் ஆண்டு வெளியான இந்த படம் பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டு எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் போனது. இதனால் சி.வி.குமாருக்கு நஷ்டமும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

சாகா வரம்
சாகா வரம் பெற்று ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாழ ஆசைப்படும் ஒரு விஞ்ஞானியின் விபரீத முயற்சியைத் தடுக்கும் காவல்துறை அதிகாரியின் கதை தான் மாயவன் திரைப்படம். வெளியான போது எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் தாமதமாக படம் கொண்டாடப்பட்டது.

பிசியாக தயாரிப்பாளர்
தற்போது 'டைட்டானிக்', 'கொற்றவை' ஆகிய படங்களை தயாரித்து வருகிறார் C.V. குமார். இது மட்டுமன்றி
'இன்று நேற்று நாளை 2', 'சூது கவ்வும் 2' ஆகிய படங்களையும் தயாரிக்கிறார். இந்நிலையில் மாயவன் 2ம் பாகத்திற்கான கதையை எழுதவும் தொடங்கியுள்ளார் C.V. குமார்.

பாராட்டும் ஆதரவும்
இது தொடர்பாக சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் ட்வீட் பதிவிட்டிருப்பதாவது,
"எங்களுக்கு பிடித்த மாயவன் நிலத்தின் மீது இறங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மாயவன் தொடர்ச்சியை #MaayavanReloaded ஆகப் பெறுவதற்கான இந்த புதிய முயற்சிக்கு நம்மைத் தூண்டியது ரசிகர்களின் நிபந்தனையற்ற பாராட்டும் ஆதரவும் ஆகும். இது குறித்த மற்ற அப்டேட்கள் ஏப்ரல் 14ம் தேதி இருக்கும்" என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











