twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நான் எப்படி கலைஞரின் குரலை மிமிக்ரி செய்தேன் தெரியுமா…? நடிகர் மயில்சாமி!

    மயில்சாமி கலைஞரின் குரலை மிமிக்ரி செய்தது குறித்து பேசினார்

    |

    மயில்சாமி கலைஞரின் குரலை மிமிக்ரி செய்தது குறித்து பேசினார்

    கோவை: கலைஞரின் குரலை எப்படி மிமிக்ரி செய்ய கத்துக்கொண்டேன் என மயில்சாமி விளக்கினார்.

    Mayilsami about Kalaignar!

    மறக்க முடியுமா கலைஞரை.. என்ற தலைப்பில் திரையுலகினர் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு புகழ் வணக்கம் செலுத்தி வருகின்றனர்.

    இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நடிகர் மயில்சாமி கல்லூரி காலங்களில் கலைஞரின் குரைலை எப்படி மிமிக்கிரி செய்யக் கற்றுக்கொண்டார் என்பதை நினைவு கூர்ந்தார்.

    கல்லூரி நிகழ்ச்சியொன்றில் கலைஞரின் குரலை மிமிக்கிரி செய்த ஒருவருக்கு நல்ல பாராட்டு கிடைத்துள்ளது. அதைப் பார்த்த மயில்சாமியின் நண்பர்கள் கலைஞரின் குரலை நீ மிமிக்கிரி செய்ய வேண்டுமெனக் கூறியுள்ளனர்.

    இரவு விடுதியில், அமர்ந்து கலைஞரின் குரலை பேச முயற்சி எடுத்துள்ளார். ஒருநாள் இரண்டு நாள் என முயற்சி செய்து, கடைசியில் ஒரு வாரத்திற்கு பிறகுதான் அவருடைய குரல் பேச முடிந்தது.

    அவர் பேசும்போது., எப்போதுமே பெர்யோர்களே, தாய்மார்களே, சகோதர சகோதரிகளே... என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே என ஆரம்பிப்பார். ஒருமுறை நிகழ்ச்சி ஒன்றில் மிமிக்கிரி செய்யும்போது பார்வையாளர்கள் சத்தம் போட ஆரம்பித்துவிட்டனர். அப்போது அருகில் இருப்பவர், 'என் உயிரினும் மேலான உடன் பிறப்புகளே' என்பதை விட்டுட்டீர்கள் எனச் சொன்னார். அதை சேர்த்து சொன்னவுடன் கைதட்டல் காதை கிழித்தது எனக் கூறினார்.

    1990க்கு பிறகு கலைஞரைப் பார்த்த போது அதேபோலத்தான் பேசினார். அவருடைய குரலுக்கு வயசாகிவிட்டது. அவருக்கு வயசாகவில்லை. என வயதான பிறகு கலைஞர் எப்படி பேசினார் என வித்தியாசப்படுத்திக்காட்டினார்.

    English summary
    Actor Mayilsami explained, how he was started to mimic Kalaignar voice during college days.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X