உதவி செய்யுறதுல அவரை போல யாருமில்லை.. மயில்சாமி நண்பருக்கென் அஞ்சலி.. கமல் உருக்கம்!

சென்னை: பிரபல நகைச்சுவை நடிகரும் நல்ல மனம் கொண்ட மனிதருமான மயில்சாமியின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையே பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

நடிகர்கள் மனோபாலா, அருண் விஜய், சார்லி, யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் காலை முதலே மயில்சாமிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் மறைந்த நடிகர் மயில்சாமிக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

மயில்சாமி திடீர் மறைவு

மயில்சாமி திடீர் மறைவு

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், விக்ரம், சிம்பு, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து அசத்திய பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி இன்று அதிகாலை உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். மயில்சாமியின் திடீர் மறைவு ஒட்டுமொத்த சினிமா பிரபலங்களையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மயில்சாமியின் உடல் ஒப்படைப்பு

மயில்சாமியின் உடல் ஒப்படைப்பு

மயில்சாமி திடீரென மயங்கி விழுந்த நிலையில், பதறிப்போன அவரது குடும்பத்தினர் அவரை போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மயில்சாமியின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்து விட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். இந்நிலையில், சற்று முன் மயில்சாமியின் உடலை குடும்பத்தினரிடம் ராமசந்திரா மருத்துவமனை நிர்வாகம் ஒப்படைத்தது. மயில்சாமியின் உடல் சென்னையில் உள்ள அவரது வீட்டில் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதி அஞ்சலி நாளை நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

கதறி அழுத மனோபாலா

கதறி அழுத மனோபாலா

மயில்சாமி உடன் பல படங்களில் நடித்துள்ள இயக்குநரும் காமெடி நடிகருமான மனோபாலா மயில்சாமியின் உடலை பார்த்து கதறி அழுதார். சமீபத்தில் தான் இயக்குநர் டி.பி. கஜேந்திரன் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட மனோபாலா தொடர்ந்து சினிமா துறையினரையே குறி வைத்து மரணங்கள் நடைபெறுவதாகவும், போதும் ஆண்டவா இத்துடன் நிறுத்திக்கோ என்றும் புலம்பி இருந்தார். இந்நிலையில், மயில்சாமியின் மறைவு செய்தி மேலும், மனோபாலாவின் மனதை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.

கமல் அஞ்சலி

கமல் அஞ்சலி

"நகைச்சுவை நடிப்பில் தனக்கென்று ஒரு பாணியை முன்னிறுத்தி வெற்றி கண்டவர் நண்பர் மயில்சாமி. உதவும் சிந்தையால் பலராலும் நினைக்கப்படுவார். அன்பு நண்பருக்கென் அஞ்சலி" என கமல்ஹாசன் ட்விட்டர் பக்கத்தில் தனது அஞ்சலியை செலுத்தி உள்ளார்.

அபூர்வ சகோதரர்கள் முதல்

அபூர்வ சகோதரர்கள் முதல்

நடிகர் கமல்ஹாசன் உடன் பல படங்களில் மயில்சாமி நடித்துள்ளார். சினிமாவில் அறிமுகமான காலத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த மயில்சாமிக்கு அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமல்ஹாசனின் நண்பராக நடிக்கும் வாய்ப்பே கிடைத்தது. மயில்சாமியின் நடிப்பும் நல்ல மனமும் கமலுக்கு பிடித்துப் போன நிலையில், தொடர்ந்து வெற்றி விழா, மைக்கேல் மதன காம ராஜன், ஆளவந்தான் உள்ளிட்ட படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

உதவும் சிந்தனையால் நினைக்கப்படுவார்

உதவும் சிந்தனையால் நினைக்கப்படுவார்

கையில் 10 ரூபாய் இருந்தால் கூட பிறருக்கு கொடுக்கக் கூடிய மனம் கொண்டவர் மயில்சாமி என விவேக் உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்கள் மயில்சாமியின் நல்ல குணத்தை பாராட்டிய நிலையில், கமல்ஹாசன் தனது அஞ்சலி குறிப்பிலும், "உதவும் சிந்தையால் பலராலும் நினைக்கப்படுவார்" என்றே தனது நண்பர் மயில்சாமியை பாராட்டி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X