Mayilsamy - என்னது எங்களுக்கு விவாகரத்தா?.. அதெல்லாம் வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த மயில்சாமி மகன்

சென்னை: Mayilsamy (மயில்சாமி) மயில்சாமியின் மருமகள்கள் விவாகரத்து கேட்டதாக வெளியான தகவலை அவரது மூத்த மகன் மறுத்திருக்கிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களான வடிவேலு, விவேக் உள்ளிட்டோருடன் இணைந்து நகைச்சுவையில் அதகளம் செய்தவர் மயில்சாமி. நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி பல குரல் மன்னனாகவும் திகழ்ந்தவர். அதோடு மட்டுமில்லாமல் காமெடி டைம் உள்ளிட்ட நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியவர் மயில்சாமி. நடிகர் என்பதை தாண்டி சிறந்த மனிதர் என்ற பெயர் எடுத்தவர்

Mayilsamys eldest son has denied a divorce News

உயிரிழந்த மயில்சாமி: தீவிர சிவபக்தரான மயில்சாமி கடந்த பிப்ரவரி சிவராத்திரியை முன்னிட்டுஇரவு முழுவதும் சிவராத்திரிக்காக விழித்திருக்கிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. அதனையடுத்து அவரது உடலானது வடபழனியில் இருக்கும் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது உயிரிழப்பு திரையுலகினரையும், ரசிகர்களையும் பெரும் சோகத்தில் தள்ளியிருக்கிறது.

உதவி என்றாலே மயில்சாமிதான்: சினிமாவில் நடிப்பவர்களில் சிலர் உதவி செய்யாமலும்; சிலர் உதவி செய்தும் கொண்டிருப்பார்கள். ஆனால் உதவி செய்வதையே தனது இன்னொரு தொழிலாக வைத்திருந்தவர் மயில்சாமி. தன்னிடம் இருக்கும் பணத்தில் பெரும்பாலும் மற்றவர்களுக்காக செலவழிப்பவர் மயில். அப்படி அவர் செய்த உதவிகள் குறித்து ஏராளமானோர் மயில்சாமி இறந்த பிறகு வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மகன்கள்: மயில்சாமிக்கு மொத்தம் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அவர்களும் சினிமாவில் நிலையான இடத்தை பிடிப்பதற்கு போராடிவருகின்றனர். மயில்சாமி இறந்த பிறகு நடந்த நினைவேந்தல் நிகழ்வில்கூட அப்பாவின் ஆசீர்வாதத்தோடும், உங்களின் அன்போடும் நாங்கள் சினிமாவில் ஒரு இடத்தை பிடிப்போம் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நிறைவேற்றிய ரஜினி: இதற்கிடையே மயில்சாமி உயிருடன் இருந்தபோது அடிக்கடி திருவண்ணாமலை போவது வழக்கம். அப்படி ஒருமுறை போய்வந்த போது ரஜினியும் வர வேண்டும் என ரஜினியிடம் கோரிக்கை வைத்திருந்தார். அதனை நிறைவேற்றும் விதமாக சமீபத்தில் ரஜினிகாந்த் அங்கு சென்றுவந்தது பலரது பாராட்டை பெற்றது.

Mayilsamys eldest son has denied a divorce News

விவாகரத்து: இந்நிலையில் மயில்சாமி குடும்பத்தில் இருக்கும் இரண்டு மருமகள்களும் விவாகரத்து கேட்பதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் பரவியது. அதுமட்டுமின்றி இரண்டு பேருமே விவாகரத்து வேண்டி நீதிமன்றம்வரை சென்றுவிட்டதாகவும் கூறப்பட்டது. அவர் இறந்து சில மாதங்களுக்குள்ளாகவே அவர் குடும்பத்தில் இப்படி நடக்க வேண்டுமா என பலரும் சோகமடைந்தனர்.

மறுப்பு: ஆனால் விவாகரத்து என்று பரவிய தகவலுக்கு மயில்சாமியின் மூத்த மகன் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து கூறிய அவர், "இது முழுக்க முழுக்க வதந்தி. விவாகரத்து என்பதில் உண்மையில்லை. யார்தான் இப்படி பைத்தியக்காரத்தனமாகவும், கீழ்த்தரமாகவும் செய்திகளையும் பரப்புகிறார்களோ என்று தெரியவில்லை" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X