லாக்டவுனில்..பிரபல நடிகை திடீர் திருமணம்..10 வருட காதலரை கரம் பிடித்தார்..நடிகர், நடிகைகள் வாழ்த்து!
பெங்களூரு: பிரபல நடிகை திடீர் திருமணம் செய்துகொண்டார். தனது பத்து வருட காதலரை அவர் கரம்பிடித்துள்ளார்.
கொரோனா லாக்டவுன் காரணமாக, சில நடிகர், நடிகைகள் தங்கள் திருமணங்களை தள்ளி வைத்துள்ளனர்.
சில தெலுங்கு மற்றும் மலையாள நடிகர்கள் இந்த லாக்டவுன் நேரத்திலும் தங்கள் திருமணத்தை எளிமையாக நடத்தி உள்ளனர்.

நடிகை மயூரி கியாதரி
இந்நிலையில், கன்னட நடிகை மயூரி கியாதரி (Mayuri Kyatari) திருமணம் பெங்களூரில் நடந்துள்ளது. இவர் அருண் என்பவரை கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தார். இந்நிலையில் இவர்கள் திருமணம் இன்று அதிகாலை எளிமையாக நடந்தது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் கலந்துகொண்டனர்.

திருமணம்
லாக்டவுனுக்காக விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை கடைபிடித்து இந்த திருமணம் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன், மயூரி திருமணம் செய்துகொள்ள இருப்பதாக செய்தி வெளியானது. ஆனால் அதுபற்றி அவர் வேறு விவரங்களை தெரிவிக்காமல் இருந்தார். இந்நிலையில் தனது திருமணம் முடிந்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

பத்து வருட நட்பு
'ஆமாம். நான் இன்று திருமணம் செய்துகொண்டேன். என் பத்துவருட நட்புக்கு இன்று அர்த்தம் கிடைத்துள்ளது. நாங்கள் விரைவில் அப்டேட் செய்கிறோம்' என்று தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார் நடிகை மயூரி. கூடவே திருமணம் செய்துகொள்ளும் வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

வாழ்த்துகள்
இதையடுத்து ரசிகர்களும் கன்னடத் திரையுலகினரும் திருமண ஜோடிக்கு, சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். நடிகை மயூரி திருமணம் செய்துள்ள அருண், மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றி வருகிறார். பெங்களூரில் செட்டிலாகும் முன் சில காலம் இலங்கையில் பணியாற்றியுள்ளார்.

நடராஜா சர்வீஸ்
நடிகை மயூரி, கன்னடத்தில், சஷாங் இயக்கிய கிருஷ்ண லீலா என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர். அடுத்து இஷ்டகம்யா என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். பின்னர் நடராஜா சர்வீஸ், கரியா 2, 8 எம்எம் புல்லட், ரஷ்டம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இப்போது நந்த கிஷோர் இயக்கும் போகரு என்ற படத்தில் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











