'மீ டூ' ஃபேஷனா?: மோகன்லாலுக்கு செம டோஸ் விட்ட ரேவதி

By Siva

Recommended Video

மோகன்லாலுக்கு செம டோஸ் விட்ட ரேவதி- வீடியோ

திருவனந்தபுரம்: மீ டூ இயக்கம் என்பது ஒரு ஃபேஷனாகிவிட்டது. அது சீக்கிரம் காணாமல் போய்விடும் என்ற நடிகர் மோகன்லாலை விளாசியுள்ளார் நடிகை ரேவதி.

திரையுலகம் மற்றும் பிற துறைகளை சேர்ந்த பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து தெரிவித்து வருவதால் இந்தியாவில் மீ டூ இயக்கம் வேகம் எடுத்துள்ளது.

இந்நிலையில் மீ டூ என்பது ஒரு இயக்கம் இல்லை, அது சீக்கிரம் காணாமல் போய்விடும். மீ டூ என்று கூறுவது ஃபேஷனாகிவிட்டது என்றார் நடிகர் மோகன்லால்.

மோகன்லால்

மோகன்லால்

மீ டூ பற்றி மோகன்லால் கூறியதை அவரின் பெயரை குறிப்பிடாமல் ட்விட்டரில் விளாசியுள்ளார் நடிகை ரேவதி. மோகன்லாலின் பேச்சை கேட்டு மலையாள நடிகைகள் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்துள்ள நிலையில் ரேவதி ட்விட்டரில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

நடிகர்

ரேவதி தனது ட்வீட்டில் கூறியிருப்பதாவது, மீ டூ இயக்கம் நீண்ட காலம் இருக்காது என்று பிரபல நடிகர் தெரிவித்துள்ளார். இது போன்றவர்களுக்கு எப்படி புரிய வைப்பது?. அஞ்சலி மேனன் கூறியது போன்று செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தவர்களுக்கு தொல்லைக்கு உள்ளாவது, அதை வெளியே தெரிவிப்பது, அதன் மூலம் எப்படி மாற்றம் வரும் என்பது தெரியாது என்று தெரிவித்துள்ளார்.

ஆதரவு

ஆதரவு

மோகன்லாலின் பெயரை குறிப்பிடாவிட்டாலும் ரேவதி அவரை தான் விளாசியுள்ளார் என்பது அனைவருக்கும் புரிந்துவிட்டது. அவரின் ட்வீட்டை பார்த்த பலர் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதிருப்தி

அதிருப்தி

மலையாள நடிகர் சங்க தலைவராக இருந்து கொண்டு மோகன்லால் இப்படி பொறுப்பில்லாமல் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நடிகையை கடத்தி பாலியல் தொல்லைக்கு ஆளாக வைத்த நடிகர் திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்த்தபோதே மோகன்லால் மீது பல நடிகைகளுக்கு கோபம் வந்துவிட்டது. அவரின் முடிவை கண்டித்து பல நடிகைகள் அம்மாவில் இருந்து விலகி தனி அமைப்பு துவங்கினர். அதில் ரேவதியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X