twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குவிந்த பாலியல் புகார்கள்: 4 மாதம் கழித்து விளக்கம் அளித்த பாடகர் கார்த்திக்

    By Siva
    |

    Recommended Video

    4 மாதம் கழித்து விளக்கம் அளித்த பாடகர் கார்த்திக்- வீடியோ

    சென்னை: மீ டூ புகாருக்கு 4 மாதம் கழித்து விளக்கம் அளித்துள்ளார் பாடகர் கார்த்திக்.

    மீ டூ இயக்கம் இந்தியாவில் தீவிரம் அடைந்தபோது பாடகர் கார்த்திக் மீதும் பாலியல் புகார் கூறப்பட்டது. கார்த்திக் தான் பிரபலமாக இருப்பதை பயன்படுத்தி பல பெண்களை கண்ட இடத்தில் தொட்டதாகவும், ஆபாசமாக மெசேஜ், வீடியோக்கள் அனுப்பியதாகவும் புகார் எழுந்தது.

    கார்த்திக் மீது பெண்கள் தெரிவித்த புகார்களை கடந்த அக்டோபர் மாதம் ட்விட்டரில் வெளியிட்டார் பாடகி சின்மயி.

    கார்த்திக்

    கார்த்திக்

    அக்டோபர் மாதம் எழுந்த புகாருக்கு கார்த்திக் தற்போது விளக்கம் அளித்துள்ளார். புல்வாமா தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துவிட்டு பாலியல் புகாருக்கும் விளக்கம் அளித்துள்ளார் அவர்.

    புகார்கள்

    புகார்கள்

    எனக்கு எதிராக ட்விட்டரில் பல புகார்கள் எழுந்தன. என் மனசாட்சிக்கு உண்மையாக நான் இதுவரை யாருக்கும் தொந்தரவு கொடுத்தது இல்லை. யாரும் பாதுகாப்பில்லாமல் உணரும்படி நான் நடந்து கொண்டது இல்லை. என் செயல்களால் யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால் தயவு செய்து என்னை நேரடியாக தொடர்பு கொள்ளவும்.

    மன்னிப்பு

    மன்னிப்பு

    நான் மீ டூ இயக்கத்தை முழுமையாக ஆதரிக்கிறேன். யார் புகாரிலாவது உண்மை இருந்தால் நான் மன்னிப்பு கேட்க தயாராக உள்ளேன் அல்லது சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ளவும் தயாராக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார் கார்த்திக்.

    விமர்சனம்

    விமர்சனம்

    கார்த்திக்கின் விளக்கத்தை பார்த்த அவரின் ரசிகர்கள் உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம், இந்த பொய் புகார்களை நினைத்து கவலைப்படாதீர்கள் என்று தெரிவித்துள்ளனர். இன்னும் சிலரோ இதை சொல்லத் தான் நான்கு மாதமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

    சமந்தா, திரிஷாவுக்கு கை கொடுத்த சென்டிமென்ட்.. மேகா ஆகாஷையும் தூக்கி நிறுத்துமா? சமந்தா, திரிஷாவுக்கு கை கொடுத்த சென்டிமென்ட்.. மேகா ஆகாஷையும் தூக்கி நிறுத்துமா?

    English summary
    Singer Karthik has given clarification about Me Too complaints against him.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X