மீ டூ எல்லாம் பப்ளிசிட்டி: என்ன, தமன்னா இப்படி சொல்லிட்டார்

By Siva

Recommended Video

மீ டூ என்பது விளம்பரம் தேட பயன்படுத்தப்படுகிறது - நடிகை தமன்னா- வீடியோ

சென்னை: மீ டூ என்பது விளம்பரம் தேட பயன்படுத்தப்படுகிறது என்று நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் தெரிவித்ததை அடுத்து இந்தியாவில் மீ டூ இயக்கம் வேகம் எடுத்தது. கோலிவுட்டில் சின்மயி மீ டூ இயக்கத்தை முன்னின்று நடத்துகிறார்.

வரலட்சுமி சரத்குமாரும் மீ டூவுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

தமன்னா

தமன்னா

வரலட்சுமியும், சின்மயியும் நியாயம் கேட்டு போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில் மீ டூ பற்றி தமன்னா தெரிவித்துள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதற்கு யார், யார் எல்லாம் கொந்தளிக்கப் போகிறார்களோ?

பாலிவுட்

பாலிவுட்

பாலியல் புகார்களில் சிக்கிய பாலிவுட் இயக்குநர் சஜித் கானின் படங்களில் நடித்தபோது தனக்கு எந்தவித பிரச்சனையும் ஏற்படவில்லை என்று முன்பு தெரிவித்தார் தமன்னா. மீ டூ என்பது பாதிக்கப்பட்டவர்கள் அது குறித்து பேசுவதற்காக துவங்கப்பட்டது. அப்படி பாதிக்கப்பட்டவர்கள் அது பற்றி பேச துணிச்சல் வேண்டும் என்று தற்போது கூறியுள்ளார் தமன்னா.

தவறு

தவறு

மீ டூ இயக்கம் வழி மாறி செல்கிறது என்று நினைக்கிறேன். தற்போது மீ டூ விளம்பரத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. அந்த இயக்கத்திற்கு உரிய மரியாதையை அளித்து சரியான வழியில் பயன்படுத்த வேண்டும் என்று தமன்னா தெரிவித்துள்ளார்.

முகம் சுளிப்பு

முகம் சுளிப்பு

சஜித் கான் மீது பல பெண்கள் பாலியல் புகார் தெரிவித்த நிலையில் அவருடன் பணியாற்றிது சவுகரியமாக இருந்தது என்று தமன்னா மீண்டும் மீண்டும் கூறுவது பாதிக்கப்பட்டவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X