மீ டூ: சில பெயர்களை கேட்டு ஷாக் ஆகிவிட்டேன்- ஏ.ஆர். ரஹ்மான்

By Siva

Recommended Video

Me Too-ல் சில பெயர்களை கேட்டு ஷாக் ஆகிவிட்டேன்- ஏ.ஆர்.ரஹ்மான்- வீடியோ

சென்னை: மீ டூ இயக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்.

பாலிவுட் நடிகர் நானா படகேர் மீது தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் தெரிவித்ததையடுத்து பலரும் புகார் தெரிவிக்கிறார்கள். தற்போது மீ டூ இயக்கம் தீவிரம் அடைந்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ட்வீட்டியுள்ளார்.

ரஹ்மான்

மீ டூ இயக்கத்தை கவனித்து வருகிறேன். தொல்லை கொடுத்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என்று சில பெயர்கள் எனக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. நம் துறை பெண்களுக்கு பாதுகாப்பானதாக மாறுவதை பார்க்க விரும்புகிறேன். தைரியமாக பேசும் அனைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் பாராட்டுக்கள். அனைவரும் பாதுகாப்புடன் பணியாற்றும் சூழலை நானும், என் அணியும் உருவாக்கி வருகிறோம். பாதிக்கப்பட்டவர்கள் பேச சமூக வலைதளங்கள் சுதந்திரம் அளிக்கிறது. ஆனால் அதை தவறாக பயன்படுத்திவிடாமல் இருக்க வேண்டும் என்று ட்வீட்டியுள்ளார் ரஹ்மான்.

ரைஹானா

ரைஹானா

ஏ. ஆர். ரஹ்மானின் சகோதரி ரைஹானா மீ டூ பற்றி கருத்து தெரிவித்தார். வைரமுத்து எப்படிப்பட்டவர் என்பது சினிமா துறையில் உள்ள அனைவருக்கும் தெரியும். அவரை பற்றி பல பெண்கள் என்னிடம் வந்து புகார் தெரிவித்துள்ளனர் என்றார். இந்நிலையில் ரஹ்மான் கருத்து தெரிவித்துள்ளார்.

வைரமுத்து

ரஹ்மானின் ட்வீட்டை பார்த்தவர்கள், தலைவரே முதல் பெயரே உங்களின் பாடல் ஆசிரியர் வைரமுத்து தான் என்று தெரிவித்துள்ளனர். ரைஹானாவுக்கு தெரிந்த விஷயம் ரஹ்மானுக்கு தெரியாதா என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஒதுக்குங்கள்

பாலியல் புகாரில் சிக்கியுள்ள வைரமுத்துவை ஒதுக்கி வைக்குமாறு ரசிகர்கள் ரஹ்மானிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இனி வைரமுத்துவுடன் வேலை செய்வதை நிறுத்திக் கொள்வாரா ரஹ்மான்?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X