மீ டூ: வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிய பிரபல இயக்குனர்

By Siva

திருவனந்தபுரம்: மலையாள இயக்குனர் லால் ஜோஸ் மீ டூ பற்றி பேசியது பலருக்கும் பிடிக்கவில்லை.

மம்மூட்டி, மோகன்லால், ஃபஹத் பாசில், துல்கர் சல்மான் உள்ளிட்டோரை வைத்து படம் எடுத்தவர் பிரபல மலையாள இயக்குனர் லால் ஜோஸ். அவர் மீ டூ இயக்கம் பற்றி கருத்து தெரிவித்து வம்பில் மாட்டிக் கொண்டுள்ளார்.

மீ டூ பற்றி அவர் பேசியது நடிகைகளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

லால் ஜோஸ்

லால் ஜோஸ்

மீ டூ இயக்கம் வேகம் எடுத்த பிறகு பெண்களை என் குழுவில் பணியமர்த்த பயமாக உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு என் பட செட்டில் பிரபல புகைப்படக் கலைஞர் மீது பாலியல் குற்றம் சுமத்தப்பட்டது. கடைசியில் பார்த்தால் அது பொய் குற்றச்சாட்டு என்பது தெரிந்தது என்று லால் ஜோஸ் தெரிவித்துள்ளார்.

ஷூட்டிங்

ஷூட்டிங்

நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும்போது சில நேரம் கோபமாக இருப்பேன், சில நேரம் ஃபிரெண்ட்லியாக இருப்பேன். நான் ஆண்கள் மற்றும் பெண்களிடம் ஒரே மாதிரி தான் பேசுவேன். ஆனால் அனைவரும் நான் நடந்து கொள்வதை நல்லவிதமாக எடுப்பது இல்லை. மீ டூ இயக்கத்தால் பயம் தான் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த பயம் நல்லதுக்கா இல்லையா என்பது தான் கவலை என்று லால் ஜோஸ் கூறியுள்ளார்.

மோகன்லால்

மோகன்லால்

மீ டூ என்பது ஒரு ஃபேஷன், நிலைத்து நிற்காமல் போய்விடும் என நடிகர் மோகன்லால் தெரிவித்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் லால் ஜோஸ் கூறியதும் யாருக்கும் பிடிக்காமல் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பயம்

பயம்

மீ டூ என்று கூறியவர்களின் கெரியர் என்னவாகியுள்ளது என்பதை பார்த்த பிற நடிகைகள் துணிந்து பேச அஞ்சுகிறார்கள். அப்படி பேசுபவர்கள் கடும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறார்கள். இந்நிலையில் லால் ஜோஸ் இப்படி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X