twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்

    By Siva
    |

    Recommended Video

    விக்ரம் பட இயக்குனர் சுசிகனேசன் மீது பெண் கவிஞர் பாலியல் புகார்- வீடியோ

    சென்னை: இயக்குனர் சுசிகணேசன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக கவிஞர் லீனா மணிமேகலை தெரிவித்துள்ளார்.

    பாலிவுட்டை அடுத்த கோலிவுட்டிலும் மீ டூ புகார்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கவிப்பேரரசு வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் கந்தசாமி, திருட்டுப்பயலே, திருட்டுப்பயலே 2 உள்ளிட்ட படங்களை இயக்கிய சுசி கணேசன் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார் கவிஞரும், இயக்குனருமான லீனா மணிமேகலை.

    [இந்த அளவுக்கு கேவலமானவரையா நம்ம நடிகை காதலித்தார்?]

    சுசி கணேசன்

    நான் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்தபோது என்னை காரில் வைத்து பூட்டியவர் இயக்குனர் சுசி கணேசன். மேலும் பலரும் தைரியமாக பேசுவதை பார்க்க விரும்புவதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார் லீனா மணிமேகலை.

    அட்டூழியம்

    2005ம் ஆண்டு சுசி கணேசன் தன் காரில் டிராப் செய்கிறேன் என்று கூறிவிட்டு தன்னிடம் அத்துமீறியது குறித்து கடந்த ஆண்டே ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தார் லீனா. ஆனால் அந்த போஸ்ட்டில் தன்னிடம் தவறாக நடந்து கொண்ட இயக்குனர் யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    புகார்

    புகார்

    லீனா மணிமேகலையின் புகாரை சுசி கணேசன் மறுத்துள்ளார். லீனா தனது கற்பனை திறனை நன்றாக பயன்படுத்துவதாக அவர் கூறியுள்ளார். கோலிவுட்டில் மட்டும் அல்ல பாலிவுட்டிலும் பாலியல் புகார் சுமத்தப்பட்டுள்ள பிரபலங்கள் அதை மறுத்துள்ளனர். மேலும் புகார் தெரிவித்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி வருகின்றனர். ஒரு சிலர் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வக்கீல் நோட்டீஸும் அனுப்பியுள்ளனர்.

    வாழ்க்கை

    சுசி கணேசனின் மறுப்பே அவரைக் காட்டிக் கொடுக்கிறது. என் சொந்த வாழ்க்கை என் மனதிற்குகந்த மிக மகிழ்ச்சியான வாழ்க்கை. அதன் வெற்றி தோல்வியை அவர் எப்படி தீர்மானிக்க முடியும். கவிஞராக என் இடமென்ன என்று என் படைப்புகளும் இலக்கிய வாசக உலகமும் சொல்லும். சினிமாவில், அவர் எடுத்த படங்களை விட மிக நல்ல படங்களையே எடுத்திருக்கிறேன். என் படங்களில் பொறுக்கிகள் ஹீரோக்கள் அல்ல. மனசாட்சியை விற்பவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும் என்கிறார் லீனா.

    தேவையில்லை

    சுசிகணேசனை சந்திக்கும்போதே நான் கவிஞர்,இயக்குனர். வாய்ப்பு கேட்கும் தேவையில் நான் இல்லை. அவரைப் பற்றிய பதிவு போட்ட பிறகு நிறைய பத்திரிகையாளர்களும் பெண்களும் அவரைக் குறித்த இன்னும் அதிபயங்கர தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்கள். அவர்களுக்கு தங்கள் அனுபவங்களைப் பகிரங்கப் படுத்தும் தைரியம் வாய்க்கட்டும்.

    English summary
    Filmmaker, poet Leena Manimekali has accused director Susi Ganeshan of misbehaving with her.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X