ஸ்ருதியிடம் அர்ஜுன் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்
Recommended Video

சென்னை: அர்ஜுன் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ள நடிகை ஸ்ருதிக்கு பிரகாஷ் ராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
நிபுணன் படப்பிடிப்பின்போது அர்ஜுன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக ஸ்ருதி ஹரிஹரன் தெரிவித்துள்ளார். அந்த சம்பவம் நடந்ததற்கான ஆதாரமும் தன்னிடம் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஸ்ருதிக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
பிரகாஷ் ராஜ்
பிரகாஷ் ராஜ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, ஸ்ருதி ஹரிஹரன் ஒரு திறமையான நடிகை. அதே சமயம் கன்னட சினிமாவின் பெருமைக்குரியவர் அர்ஜுன் சர்ஜா என்பதை மறக்கக் கூடாது. இருப்பினும் இத்தனை நாட்களாக ஸ்ருதி தனியாக அனுபவித்த வலியை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த புகாரை மறுத்துள்ள போதிலும் அர்ஜுன் அந்த சமயத்தில் நடந்து கொண்டதற்காக மன்னிப்பு கேட்பதில் தவறு இல்லை. அவர் அப்படி செய்தால் அவரின் பெருந்தன்மையை காட்டும். பாலியல் தொல்லைக்கு ஆளான ஸ்ருதி ஹரிஹரன் உள்ளிட்ட பெண்களை ஆதரிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மன்னிப்பு
உங்களுக்கு இது போன்று யாராவது செய்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? தவறு செய்யாமல் மன்னிப்பு கேட்பீர்களா? என்று ஒருவர் பிரகாஷ் ராஜிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹீரோக்கள்
ஸ்ருதி ஹரிஹரனுக்கு விக்ரம் வேதா படம் புகழ் நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஆதரவு தெரிவித்துள்ளார்.

நீதிமன்றம்
ஸ்ருதி தெரிவித்துள்ள புகாரை அர்ஜுன் மறுத்துள்ளார். ஆனால் ஸ்ருதியோ தன்னிடம் ஆதாரம் உள்ளது என்றும் அதை நீதிமன்றத்தில் சமர்பிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பிரகாஷ் ராஜோ அர்ஜுனை தனது செயலுக்காக மன்னிப்பு கேட்குமாறு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











