குடிபோதையில் கொடைக்கானல் ஹோட்டலில் அத்துமீறப் பார்த்தார்: நடிகர் மீது நடிகை புகார்

By Siva

மும்பை: நடிகர் ஆலோக் நாத் குடிபோதையில் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக நடிகை சந்தியா மிருதுல் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் ஆலோக் நாத் மீது இயக்குனர் வின்டா நந்தா உள்பட 2 பேர் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பாலிவுட் படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் சந்தியா மிருதுலும் புகார் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

மகள்

மகள்

தொலைக்காட்சி தொடரில் நான் ஆலோக் நாத்துடன் நடித்தேன். அவர் என் நடிப்பை பார்த்து இம்பிரஸ்ஸாகி என்னை கடவுளின் குழந்தை என்று புகழ்ந்தார். தினமும் என்னை பாராட்டினார். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு நாள் சீக்கிரமே பேக்கப் செய்தார்கள். அனைவரும் டின்னருக்கு சென்றனர். அப்போது அவர் குடித்துவிட்டு என்னை அவர் அருகில் அமருமாறு கூறினார். உடனே என் சக நடிகை ஒருவர் என்னை அங்கிருந்து அழைத்துச் சென்றார்.

ஆலோக் நாத்

ஆலோக் நாத்

நாங்கள் சாப்பிடாமலேயே ஹோட்டல் அறைக்கு சென்றோம். இரவு நேரத்தில் ஆலோக் நாத் வந்து என் அறை கதவை தட்டினார். கதவை திறந்ததும் அவர் உள்ளே வந்து என் மீது விழுந்தார். நான் பாத்ரூம் கதவு மீது விழுந்தேன். நீ என்னுடையவள், நீ எனக்கு வேண்டும் என்று அவர் கூறினார். அவர் பாத்ரூம் பக்கம் வந்தபோது உள்ளே சென்றார். நான் உடனே கதவை பூட்டிவிட்டு அறையை விட்டு ஓடிவிட்டேன். என் அறையை விட்டு போக மறுத்தார் அவர். ஒரு வழியாக அவரை அனுப்பி வைத்தோம். என்னுடைய ஹேர்ஸ்டைலிஸ்ட் எனக்கு துணையாக என் அறையில் இருந்தார்.

குடி

குடி

இந்த சம்பவம் நடந்த சில மணிநேரத்தில் பாவ்ஜியுடன் அதுவும் அவர் மடியில் அமர்ந்து அழும் காட்சியை எடுத்தார்கள். எனக்கு கொமட்டிக் கொண்டு வந்தது. தினமும் மாலை குடித்துவிட்டு இரவு என் அறைக்கு போன் செய்வார். ஒரு நாள் என்னிடம் வந்து தனக்கு குடிப்பழக்கம் இருப்பதாகவும், அதனால் தனது குடும்பம், திருமணம் நாசமாகிவிட்டதாகவும் கூறி மன்னிப்பு கேட்டார். நான் அவர் மகள் போன்று என்று கூறினார்.

மகிழ்ச்சி

அவர் மன்னிப்பு கேட்டதை நம்பி நான் மகிழ்ச்சி அடைந்தேன். அப்பாடி எல்லாம் முடிந்து விட்டது என்று நினைத்தேன். என் சக நடிகர்கள், அதிலும் குறிப்பாக மறைந்த நடிகை ரீமா லகு என்னை தாய் போன்று பாதுகாத்தார். ஆனால் மும்பை திரும்பிய பிறகு நான் திமிர்பிடித்தவள் என்று அனைவரிடமும் கூறியுள்ளார் ஆலோக் நாத் என்று சந்தியா தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Read more about: mumbai மும்பை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X