#me-vijay: திடீரென தேசிய அளவில் ட்ரெண்டிங் ஆன'மீ - விஜய்' - காரணம் அட்லீ?
சென்னை: விஜய் ரசிகர்கள் 'me-vijay' என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டிங் ஆக்கியுள்ளனர்.
ரசிகர்கள் தங்களது ஆஸ்தான நடிகர்களின் பட அறிவிப்புகளை டிரெண்டிங் ஆக்குவது வழக்கம் தான். சமயங்களில் திடீரென ஏதாவது ஒரு வார்த்தை டிரெண்டிங் ஆவதும் உண்டு. அதற்கு நல்ல உதாரணம் நேசமணி. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திடீரென prayfornesamani என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆனது.
இந்நிலையில் தற்போது "#me-vijay" என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் நேற்று டிரெண்டிங் ஆகியுள்ளது. டிவிட்டரில் விஜய் ரசிகர்கள் பலர், எங்கள் வீட்டில் தந்தை இவரின் ரசிகர், தாய் இவரின் ரசிகர், நான் விஜய் ரசிகர் என பதிவிட்டு வருகின்றனர்.
குடும்பமே விஜய் ரசிகர்கள்
இந்த ரசிகரின் குடும்பத்தில் தாத்தா, பாட்டியை தவிர மற்ற அனைவரும் விஜய் ரசிகர்களாகவே உள்ளனர். இப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்தது தனக்கு பெருமையாக இருப்பதாக இவர் கூறியுள்ளார்.
கேரள ரசிகர்
இவர் குடும்பத்தில் எல்லோருமே விஜய் ரசிகர்கள் தானாம். கடைசியில் கேரளாவே விஜய் ரசிகர்கள் என ஒரே போடாக போட்டுள்ளார் இந்த ரசிகர்.
விஜய் ரசிகர்
இந்த ரசிகர் வீட்டில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நடிகரின் ரசிகர்களாக உள்ளனர். இந்த ரசிகர் மட்டும் தான் விஜய் ரசிகராம். ஆனாலும் இதனால் தான் மீ விஜய் டிரெண்டிங் ஆகிவிட்டது என்கிறார் இவர்.
விஜய் பிறந்தநாள்
இன்னும் ஒரு வாரத்தில் விஜய் பிறந்தநாள் வர இருக்கிறது. எனவே அதற்கான கொண்டாட்டமாக இந்த ஹேஷ்டேக்கையும் விஜய் ரசிகர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இது தான் காரணம்:
நடிகர் விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் தனது 63-வது படத்தில் நடித்து வருகிறார். இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்தப் படத்தின் அப்டேட்டை ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் விஜய் ரசிகர்கள். அது வராத கோபத்தில் தான் இப்படி ஒரு ஹேஷ்டேக்கை டிரெண்டிங் ஆக்கிவிட்டனர் போலும்.


Click it and Unblock the Notifications











