அர்த்தமுள்ள படைப்பு.. கைதியை புகழ்ந்து தள்ளிய சரத்குமார்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த வாரம் வெளியான கைதி திரைப்படத்தை பார்த்த நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் வெகுவாக பாராட்டியுள்ளார்.

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான கைதி திரைப்படம் ஒருவாரம் ஆகியும் கூட்டம் குறையாமல் தியேட்டர்கள் மற்றும் காட்சிகள் அதிகரித்த வண்ணம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது.

இந்த படத்தை சமீபத்தில் பார்த்த நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் கைதி படத்தை அர்த்தமுள்ள படைப்பு என பாராட்டியுள்ளார்.

மாணவர்களுக்கு இரவு காட்சி

ஆக்‌ஷன், சென்டிமென்ட் என பல விஷயங்களை கச்சிதமாக கையாண்டுள்ள கைதி படத்தை கேரளாவின் கோட்டயத்தில் உள்ள மவுன்ட் கார்மேல் வித்யா நிகேதன் படம் பள்ளி மாணவர்களுக்கு வரலாற்றிலேயே முதன்முறையாக இரவு நேர ஸ்பெஷல் காட்சியாக காண்பித்துள்ளது. கைதி படம் முழுக்க முழுக்க இரவு நேரத்தில் நடைபெறுவதால், இந்த ஏற்பாட்டை அந்த பள்ளி செய்துள்ளதாம்.

வசூல்

வசூல்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான கைதி திரைப்படம் கடந்த 7 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் 25 கோடி வசூலை எட்டியுள்ளதாம். மொத்தமாக 42 முதல் 45 கோடி வரை வசூலாகியிருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 25 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கைதி திரைப்படம் இரு மடங்கு வசூல் செய்துள்ளது. இந்த வார இறுதியிலும் கைதி படம் மேலும் வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அர்த்தமுள்ள படைப்பு

கைதி படத்தை பார்த்த பிரபல நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார், இது மிகவும் சிறந்த படம் என்றும், இப்படி ஒரு அர்த்தமுள்ள படைப்பை தமிழ் சினிமாவுக்கு கொடுக்க உழைத்த அத்தனை பேருக்கும் தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நடிகர் சரத்குமார் விஜய்யின் பிகில் படத்தையும் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தளபதி 64

கைதி படத்தின் வெற்றி விழா கொண்டாட்டங்களில் கூட கலந்து கொள்ள நேரமின்றி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தளபதி 64 படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங்கிற்காக படக்குழுவுடன் டெல்லி கிளம்பியுள்ளார். நடிகர் விஜய் விமானத்தில் இருக்கும் புகைப்படங்களும், டெல்லியில் உள்ள SRCC கல்லூரியில் இன்று முதல் படப்பிடிப்பு நடைபெற உள்ள தகவல்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X