பழைய புகைப்படங்களை தூசு தட்டும் பிரபலங்கள்.. 10 வருட சவாலை ஓவர் டேக் செய்யும் #MeAt20
சென்னை: லாக் டவுன் நேரத்தில் போராடிக்காமல் இருக்க புதுப் புது சவால்கள் தோன்றிய வண்ணம் இருக்கின்றன.
கடந்த ஆண்டு சமூக வலைதளத்தில் #10yearchallenge என்ற ஹாஷ்டேக் டிரெண்ட் ஆனது.
இந்நிலையில், தற்போது #MeAt20 என்ற புதிய ஹாஷ்டேக் ட்வீட்டரில் டிரெண்டாகி வருகிறது.
பல பிரபலங்களும், தாங்கள் 20 வயதில் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு வருகின்றனர்.
அனுபம் கெர்
பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர், தான் 20 வயதில் எடுத்த புகைப்படத்தை இந்த ஹாஷ்டேக்கில் பதிவிட்டுள்ளார். 65 வயதாகும் அனுபம் கெர் 45 ஆண்டுகளுக்கு முன்னதாக கோட் சூட் போட்டு க்யூட் வாலிபனாக இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் அள்ளி வீசி வருகின்றனர்.
ரத்ன குமார்
மேயாத மான், ஆடை படங்களின் இயக்குநரும் மாஸ்டர் படத்தின் வசன கர்த்தாவும் ஆன ரத்ன குமார், தனது 20 வயது போட்டோவை போட்டு #MeAt20 சவாலை ஏற்றுள்ளார். அப்பவே அப்படி என தளபதி விஜய் போக்கிரி படத்தில் பறப்பது போன்ற போஸை கொடுத்துள்ள ரத்னகுமாரை தளபதி ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
ஷ்ரத்தா ஸ்ரீநாத்
ட்விட்டரில் டிரெண்டாகி வரும் #MeAt20 சவாலை ஏற்று தனது 20 வயது புகைப்படத்தை நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, லைக்குகளை குவித்து வருகிறார். கன்னட நடிகையான ஷ்ரத்தா தமிழில் விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை, கே 13 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
ஸ்வரூப் ராவல்
கி அண்ட் கா, உரி தி சர்ஜிக்கல் ஸ்டிரைக், தி கிரேட் இந்தியன் டிஸ்ஃபன்க்ஷனல் உள்ளிட்ட பல பாலிவுட் படங்களில் நடித்துள்ள பழம்பெரும் நடிகை ஸ்வரூப் ராவல் தனது இளைமையான 20 வயது புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்கள் மத்தியில் வைரலாக்கி உள்ளார். சினிமா மட்டுமின்றி, விளையாட்டு, அரசியல் என பல துறைகளில் இருக்கும் பிரபலங்களும், பொது மக்களும் இந்த சவாலை ஏற்று டிரெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











