twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஷமிதாப்.. இளையராஜா, அமிதாப், தனுஷுக்கு பாராட்டுகள் குவிகின்றன!

    By Shankar
    |

    நேற்று வெளியான ஷமிதாப் படத்துக்கு மீடியாவிலும் விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டுகள் குவிகின்றன.

    குறிப்பாக படத்தில் அமிதாப் பச்சன், இளையராஜா, தனுஷ், அக்ஷரா ஹாஸன் ஆகியோரின் பங்களிப்பு பெரிதும் பாராட்டப்படுகிறது.

    அதிக அரங்குகளில்

    அதிக அரங்குகளில்

    ஆர் பால்கி இயக்கத்தில் உருவான ஷமிதாப், பெரும் எதிர்ப்பார்ப்புக் கிடையில் வெளியானது. உலகெங்கும் அதிக அரங்குகளில் படம் வெளியிடப்பட்டது.

    மீடியா

    மீடியா

    நேற்று படம் பார்த்த பலரும் பாராட்டித் தள்ளினர். பெருமளவு மீடியா சாதகமான கருத்துக்களையே தெரிவித்திருந்தன.

    சமூக வலைத் தளங்கள்

    சமூக வலைத் தளங்கள்

    சமூக வலைத் தளங்களிலும் ஷமிதாப் குறித்து நல்ல விமர்சனங்களைத் தந்தனர் பயனாளர்கள்.

    அமிதாப் பச்சன்

    அமிதாப் பச்சன்

    இந்தப் படம் ஒரு முழுமையான அமிதாப் ஷோ என பாராட்டின வட இந்திய ஊடகங்கள். அமிதாப் தன் குரலால் இந்தப் படத்தைத் தாங்கிப் பிடிக்கிறார் என பாராட்டியுள்ளனர் விமர்சகர்கள்.

    தனுஷ்

    தனுஷ்

    நடிப்பில் அசுரன் என வர்ணிக்கப்படும் அமிதாப்புக்கு இணையாக, பல காட்சிகளில் அவரையே ஓவர் டேக் செய்துள்ளார் தனுஷ் என பாராட்டியுள்ளனர். தனுஷின் இயல்பான நடிப்பும் அவரது தோற்றமும் வட இந்திய ரசிகர்களைக் கவர்ந்துவிட்டது.

    இளையராஜா

    இளையராஜா

    படத்தின் இன்னொரு நாயகன் இளையராஜாதான் எனும் அளவுக்கு அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன. பாடல்கள் ஏற்கெனவே நல்ல ஹிட். படத்துக்கு உயிரோட்டமாய் திகழும் அவரது பின்னணி இசை, தனி ஆல்பமாகவே வந்தாலும் வியப்பில்லை.

    அக்ஷரா ஹாஸன்

    அக்ஷரா ஹாஸன்

    கமலின் இளைய மகள் அக்ஷராவுக்கு இது முதல் படம். அவரது அழகும் நடிப்பும் முதல் படத்திலேயே பெரும் பாராட்டுகளைக் குவித்துள்ளது.

    ஆர் பால்கி

    ஆர் பால்கி

    படத்தின் எழுத்தாளர் - இயக்குநர் பால்கிதான் இவர்கள் அத்தனை பேரையும் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்டவர். படத்தின் இறுதியில் சல்யூட் சினிமா என்று போட்டு, எழுத்து - இயக்கம் - ஆர் பால்கி என்று போடுகிறார். இப்படி போட்டுக் கொள்ளும் உண்மையான தகுதி பால்கிக்கு மட்டுமே உண்டு என விமர்சனங்களில் குறிப்பிட்டுள்ளனர்.

    எதிர்மறை கருத்துகள்

    எதிர்மறை கருத்துகள்

    படத்துக்கு எதிர்மறை விமர்சனங்களும் இல்லாமல் இல்லை. படத்தின் இரண்டாம் பாதி காட்சிகள் மற்றும் க்ளைமாக்ஸை சிலர் குறை கூறி வருகின்றனர். எதிர்ப்பார்த்த உணர்வை படம் தரவில்லை என்பது இவர்களின் கருத்து.

    குறிப்பிடத்தக்க படம்

    குறிப்பிடத்தக்க படம்

    எதிர்மறை விமர்சனங்கள் இருந்தாலும் பாலிவுட்டில் இது குறிப்பிடத்தக்க படம் என்பதும், தனுஷ் தன்னை வலுவாகக் காலூன்றிக் கொள்ள இந்தப் படம் உதவியிருப்பதாகவும் பரவலாகப் பேசப்படுகிறது.

    English summary
    Here is the media feedback for Amitabh - Dhanush starrer Shamitabh.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X