குண்டம்மான்னா சொல்றீங்க... தமிழே வேண்டாம் - அனுஷ்கா
அனுஷ்காவுக்கு 34 வயதாகிறது. எடையும் போட்டுவிட்டார். ஆனாலும் க்ரேஸ் மட்டும் குறையவே இல்லை. இன்னமும் கூட வாய்ப்புகள் வந்து கதவைத் தட்டிக்கொண்டே தான் இருக்கிறது.
ஆனால் பார்த்து பார்த்துதான் கதையை ஓகே செய்கிறாராம். எல்லாம் தெலுங்குக்கு மட்டும்தான். தமிழில் நடிக்க அழைத்தால் ஏகப்பட்ட கண்டிஷன்கள் போடுகிறாராம். பெரிய இயக்குநர்கள் பெரிய ஹீரோக்கள் என்றால் மட்டுமே ஓகே சொல்கிறார்.

மற்றபடி தமிழ் என்றாலே கதை கேட்கக் கூட மறுக்கிறார். காரணம் கேட்டால், "தமிழ் மீடியாக்கள்தான் நான் குண்டாகி விட்டேன் என்று அதிகம் எழுதின. எனக்கு தமிழ் படிக்க தெரியாததால் கிசுகிசுக்களும் கிளப்பி விட்டன. எனவே தமிழ் பக்கம் இனி வரவே மாட்டேன்," என்கிறாராம்.
குண்டா ஆனா குண்டுன்னு தானே சொல்ல முடியும்... இதெல்லாம் ஒரு விஷயமா அனுஷ்கா... நாங்க வேணா உங்களை இஞ்சி இடுப்பழகின்னு சொல்லட்டுமா?
Comments


Click it and Unblock the Notifications