இனி அந்த பிரச்சனையும் இல்லை.. மருத்துவ முகாம் உடன் நடக்கும் தளபதி விஜய் விருது விழா!

சென்னை: தமிழ்நாட்டு அரசியலில் அதிரடியாக கால் எடுத்து வைத்திருக்கும் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியியையும் ஆரம்பித்துள்ளார். கடந்த ஆண்டு கல்வி விருது விழாவை ஒரே மூச்சில் நடத்திய நடிகர் விஜய் இந்த ஆண்டு அதையும் திட்டமிட்டு இரண்டு கட்டங்களாக பிரித்து நடத்தி வருகிறார்.

முதல் கட்டமாக 21 மாவட்டங்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக ஜூலை 3ம் தேதியான இன்று 17 மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்குகிறார்.

vijay tvk students

அதற்காக காலையிலேயே நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு வருகை தந்த விஜய் அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்துள்ளார். மேலும், இன்று மீண்டும் மாணவர்கள் மத்தியில் சில நிமிடங்கள் பேசுகிறார். இந்நிலையில், மருத்துவ முகாம் ஒன்றும் தயார் நிலையில் இருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கற்றுக் கொள்ளும் விஜய்: அரசியல் கட்சியை ஆரம்பித்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என முடிவெடுத்த விஜய் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொண்டு ஒவ்வொரு விஷயத்தையும் சரி செய்து வருவது பாராட்டுக்குரியது. கடந்த முறை நிகழ்ச்சியில் திடீரென ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஆம்புலன்ஸுக்கு போன் செய்தும் வர தாமதமானது. இந்நிலையில், அதுபோன்ற எதிர்பாராத விஷயங்களும் நடைபெறும் சுமார் 4 ஆயிரம் பேர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் தேவை என்பதை புரிந்துக் கொண்டிருக்கிறார்.

vijay tvk students

மருத்துவ முகாம்: இந்நிலையில், நிகழ்ச்சி நடக்கும் மண்டபத்திலேயே இந்த முறை ஒரு மருத்துவ முகாமையும் ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார் நடிகர் விஜய். சுமார் 700 மாணவர்களுக்கு இன்று பரிசுகளை வழங்க உள்ளார். மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வருவதற்கான வாகனங்கள் முதல் அவர்கள் தங்குவதற்கான வசதி மற்றும் காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு என அனைத்து ஏற்பாடுகளையும் தவெக நிர்வாகிகள் கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.

vijay tvk students

கிளம்பிய சர்ச்சை: கடந்த முறை மாணவி ஒருவர் நடிகர் விஜய் தோளில் கை போடும் போது அவரது கையை எடுத்து அவர் கைகளுக்குள் பிடித்து நிற்கும் படி போஸ் கொடுக்க வைத்ததை சோஷியல் மீடியாவில் விஜய்க்கு எதிராக திருப்பி விட்டு பெரிய சர்ச்சையை கிளப்பினர். சில பிரபலங்கள் மாணவிகள் மீது விஜய் எப்படி கை போடலாம் என்கிற கேள்விகளையும் எழுப்பினர். ஆனால், மாணவிகளை தாண்டி சில அம்மாக்களே விஜய் கையை எடுத்து தோளில் போட வைத்த காட்சிகளையும் பார்க்க முடிந்தது. இந்நிலையில், இந்த முறை என்ன என்ன சர்ச்சைகள் கிளம்பும், என்ன என்ன க்யூட்டான நிகழ்வுகள் நடக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் வெயிட்டிங்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X