நுவே ஹீரோ... மீக்கு மாத்ரமே செப்தா பாடலை வெளியிட்ட விஜய் தேவரகொண்டா
ஹைதராபாத்: வாணி போஜன் நடிக்கும் மீக்கு மாத்ரமே செப்தா படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்று நேற்று யூடியூபில் வெளியாகியுள்ளது. இப்பாடலுக்கு தயாரிப்பாளரான விஜய் தேவரகொண்டா நடனம் ஆடியுள்ளார். இப்பாடல் குழப்பத்தில் இருக்கும் ஹீரோவுக்கு அறிவுரை வழங்கி குழப்பத்தை நீக்குவதாக அமைந்துள்ளது.
சின்னத்திரையில் நாடகங்களில் நடித்து பிரபலமான வாணி போஜன், தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். மேலும் வாணி போஜன் டிவி சீரியல்களில் நடிப்பதையும் முழுவதுமாக நிறுத்தி விட்டார். நல்ல கதையம்சம் கொண்ட சீரியல் வாய்ப்புகள் கதவை தட்டினாலும், நோ சொல்லிவிட்டு, வெய்ட்டான படங்களுக்காக காத்திருந்தார்.
அவ்வப்போது பல்வேறு நிகழ்ச்சிகளில் விருந்தினராகவும் நடுவராகவும் வந்து சென்ற வானி போஜன் தற்போது மீக்கு மாத்ரமே செப்தா எனும் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இதில் பெல்லீ சூப்லு பட இயக்குனர் தருன் பாஸ்கர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தெலுங்கு ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோவாக வலம் வரும் கீதா கோவிந்தம் நாயகன் விஜய் தேவரகொண்டா இப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தை இயக்கி வருகிறார் சமீர் சல்தான். படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
வாணி போஜன் இந்த படத்திற்கு பிறகு ஓ மை கடவுளே படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தில், தெகிடி நாயகன் அசோக் செல்வனுடன் நடித்து வருகிறார். அசோக் செல்வன் கடைசியாக ப்ரியதர்சன் இயக்கத்தில் சில சமயங்களில் படத்தில் நடித்திருந்தார்.

தற்போது மீக்கு மாத்ரமே செப்தா படத்திலிருந்து நுவே ஹீரோ என்ற பாடல் வெளியாகி இருக்கிறது. முதன் முதலில் விஜய் தேவரகொண்டா தயாரிக்கும் இந்த படத்தில் வரும் இந்த புரோமஷன் பாட்டில் விஜய் தேவரகொண்டாவே வந்து ஆடி இருக்கிறார்.
விஜய் தேவரகொண்டா தனக்கு ஆடத் தெரியாது என்றும், இந்த படத்திற்காக தான் நடனம் கற்று கொண்டதாகவும் கூறியுள்ளார். இந்த பாடல் எதைப் பற்றியது என்றால், குழப்பத்தில் இருக்கும் ஹீரோவுக்கு அறிவுரை வழங்கி அந்த குழப்பத்தையும் பாடல் வழியாக நீக்குவதே.
இப்பாடலில், வெள்ளை உடையில் வந்து சின்னச் சின்ன நடன அசைவுகளையே செய்து பாடலுக்கு சரியான பார்வையை கொடுத்து இருக்கிறார் விஜய் தேவரகொண்டா. இந்த படம் தான் வாணி போஜன் அறிமுகமாகும் முதல் படம். வரும் நவம்பர் 1ஆம் தேதியன்று இந்த திரைப்படம் வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











