இவருக்கா இந்த நிலைமை...கணவர் உடலுக்கு மகளுடன் சேர்ந்து தானே இறுதிச்சடங்குகள் செய்த மீனா

சென்னை : வீட்டில் ஆண்கள் யாரும் இல்லாததால் தனது மகளுடன் சேர்ந்து, கணவர் வித்யாசாகரின் உடலுக்கு மீனா இறுதிச்சடங்குகள் செய்த காட்சி அனைவரையும் கலங்க வைத்தது.

Recommended Video

Meena-வீட்டிற்கு வந்த Rajinikanth, Sarathkumar, Kushboo *Celebrity

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் மீனா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, டாப் ஹீரோயினாக இருந்து, இன்றும் பிரபல நடிகையாக இருந்து வருகிறார்.

க்யூட்டான சிரிப்பு, கொஞ்சி கொஞ்சி குழந்தை போல் குரல், குழந்தை தனத்துடன் குறும்புத் தனமும் நிறைந்த செய்கைகள் இவைகள் தான் மீனாவின் அடையாளங்களாக ரசிகர்களாலும், திரைத்துறையினராலும் பார்க்கப்படுகிறது.

மீனாவின் கணவர் காலமானார்

மீனாவின் கணவர் காலமானார்

ஆனால் இன்று அவை எதுவும் இல்லாமல், கலங்கி போய் தனது கணவரை இழந்த அதிர்ச்சி, தாங்க முடியாத துயரத்தில் இருந்து வருகிறார் நடிகை மீனா. நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த மீனாவின் கணவர் நேற்று மாலை உயிரிழந்தார். இது திரைத்துறையினர் மட்டுமின்றி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

வித்யாசாகர் மரணத்திற்கு காரணம்

வித்யாசாகர் மரணத்திற்கு காரணம்

48 வயதாகும் வித்யாசாகர், பெங்களூருவை சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினியரும், தொழிலதிபரும் ஆவார். ஐடி துறையில் இருந்து வந்த வித்யாசாகர், கொரோனாவிற்கு பிந்தைய பாதிப்புக்களால் பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய இருந்த நிலையில் திடீரென உடல்நிலை மோசமாகி உயிரிழந்து விட்டதாக கூறப்பட்டது.

பிரபலங்கள் அஞ்சலி

பிரபலங்கள் அஞ்சலி

மீனாவின் கணவர் உடலுக்கு ரஜினிகாந்த், குஷ்பு, சுந்தர்.சி, சிநேகா, சங்கீதா கிருஷ், பிரபு தேவா, டைரக்டர் சேரன், ரம்பா, விஜயக்குமார் குடும்பத்தினர் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். மிகுந்த மன வேதனையுடன் அனைவரும் மீனாவின் வீட்டிற்குள் இருந்து வந்ததை பார்க்க முடிந்தது.

இறுதிச்சடங்கு செய்த மீனா

இறுதிச்சடங்கு செய்த மீனா

வித்யாசாகரின் உடல் கொட்டூர்புரத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு, பெசன்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக வீட்டில், தங்களின் குடும்ப பழக்கப்படி இறுதிச்சடங்குகள் நடைபெற்றது. வீட்டில் ஆண்கள் யாரும் இல்லாததால் மகள் நைனிகாவுடன் சேர்ந்து மீனாவே தனது கணவரின் உடலுக்கு இறுதிச்சடங்குகளை செய்தார்.

கதறி அழுத உறவினர்கள்

கதறி அழுத உறவினர்கள்

மீனாவின் அப்பா 2014 ம் ஆண்டு ஜுன் மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார். அதற்கு பிறகு மீனாவின் அம்மா ராஜமல்லிகா, மீனாவுடன் வசித்து வருகிறார். மீனாவிற்கு ஒரே மகள் தான். வீட்டில் இருந்த ஒரு ஆண் வித்யாசாகர் தான். தற்போது அவரும் உயிரிழந்து விட்டதால், வெள்ளை நிற துண்டை போர்த்தியபடி, மகள் நைனிகாவுடன் சேர்ந்து மீனாவும் வெள்ளை துண்டு போர்த்தியபடி இறுதிச்சடங்கு செய்த காட்சி அனைவரையும் கதறி அழ வைத்தது.

கலங்கிய கண்ணுடன் மீனா

கலங்கிய கண்ணுடன் மீனா

கலங்கிய கண்ணுடன், கணவரின் உடலை பார்த்து அழுதபடியே வாசலில் வந்து நின்ற மீனாவின் வீடியோ வெளியாகி தற்போது அனைவரையும் கலங்க வைத்துள்ளது. மீனாவிற்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியாமல் அவரின் திரையுலக நண்பர்களும் கலங்கியபடி நிற்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X