விஷால் பாட்டுக்கு.. விஜய் ஹீரோயின் உடன் செம குத்தாட்டம் போட்ட மீனா.. குவியும் லைக்ஸ்!

சென்னை: நடிகை மீனா தனது சோகத்தை மறந்து விஜய் பட நடிகை ஒருவருடன் குத்தாட்டம் போட்ட வீடியோவை ஷேர் செய்து ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளார்.

கடந்த ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக நடிகர் மீனாவின் கணவர் வித்யாசாகர் திடீரென உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

சினிமா பிரபலங்கள் பலரும் மீனாவின் கணவர் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். நடிகை மீனாவை ஆறுதல் படுத்த தொடர்ந்து பல முன்னணி நடிகைகள் அவரது வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

விஜய் பட ஹீரோயின்

விஜய் பட ஹீரோயின்

நடிகர் விஜய்யுடன் விஷ்ணு, ரசிகன், நிலாவே வா உள்ளிட்ட சில படங்களில் ஹீரோயினாக நடித்த நடிகை சங்கவி உடன் தான் மீனா அப்படியொரு நடனத்தை போட்டுள்ளார். சமீபத்தில் மீனாவை அவரது வீட்டுக்கு சென்று சந்தித்துள்ளார் சங்கவி. நீண்ட நாள் கழித்து தோழிகள் இருவரும் சந்தித்துக் கொண்ட நிலையில், பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடி அதன் வீடியோவை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்துள்ளனர்.

மீனா செம ஹேப்பி

மீனா செம ஹேப்பி

கணவர் வித்யாசாகர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். மகள் நைனிகாவுடன் சோகத்தில் இருந்து வந்த நடிகை மீனாவை அவருடன் நடித்த சக நடிகைகள் அடிக்கடி சென்று சந்தித்து ஹேப்பி ஆக்கி வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் நடிகை சங்கவி மீனா வீட்டுக்கு வந்து சந்தித்த நிலையில், மீனா ரொம்பவே சந்தோஷமாகி ஆட்டம் போட்டுள்ளார்.

விஷால் பாட்டுக்கு

விஷால், மிருணாளினி ரவி, ஆர்யா நடிப்பில் வெளியான எனிமி படத்தில் இடம்பெற்ற மாலை டும் டும் பாடலுக்கு இரு சீனியர் நடிகைகளும் செம குத்தாட்டம் போட்ட வீடியோவை நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில், மீனாவின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

நல்ல தோழிகள்

நல்ல தோழிகள்

நாட்டாமை, பொற்காலம், ரிஷி மற்றும் உளவுத்துறை போன்ற படங்களில் மீனா மற்றும் சங்கவி இருவரும் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர். அப்போதிலிருந்தே இருவரும் நல்ல தோழிகளாக வலம் வரும் நிலையில், சமீபத்தில் இருவரும் சந்தித்துக் கொண்ட நிலையில், கவலைகளை மறந்து நடனமாடிய வீடியோவை வெளியிட்டு டிரெண்டாக்கி உள்ளனர்.

குவியும் லைக்ஸ்

குவியும் லைக்ஸ்

சீனியர் நடிகைகளன மீனா மற்றும் சங்கவி நடனமாடுவதை பார்த்த ரசிகர்கள் இப்பவும் இருவரும் செம அழகாக இருக்கீங்க என கமெண்ட்டுகளை பறக்கவிட்டு லைக்குகளை குவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X