95 நாட்களாக அப்பாவிடம் பேசாத மகள்.. நைனிகாவின் பரிதாப நிலை குறித்து பிரபலங்கள் உருக்கம்!

சென்னை : நடிகை மீனா மற்றும் வித்யாசாகர் தம்பதி கடந்த 2009ல் திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில் நுரையீரலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு வித்யாசாகர் உயிரிழந்தார்.

மீனாவை விட நைனிகா குறித்தே தற்போது அனைவரும் கவலை தெரிவித்து வருகின்றனர். இந்த சிறியவயதில் தந்தையை இழந்து பரிதவிக்கும் நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.

நடிகை மீனா

நடிகை மீனா

நடிகை மீனா சிறுவயதில் இருந்தே நடித்து வருகிறார். சிறுவயதிலேயே அன்புள்ள ரஜினிகாந்த் என்ற படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளார். தொடர்ந்து தென்னிந்திய அளவில் சில படங்களில் நடித்தார். இதையடுத்து தமிழில் எஜமான் என்ற படத்தில் ரஜினியுடன் இவரது திரைப்பயணம் தொடர்ந்தது.

2009ல் திருமணம்

2009ல் திருமணம்

தொடர்ந்து ரஜினியுடன் முத்து உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் சிறப்பான பல படங்களில் நடித்துவந்த இவர் கடந்த 2009ல் வித்யாசாகர் என்ற சாப்ட்வேர் இன்ஜீனியரை திருமணம் செய்துக் கொண்டார். ஆனாலும் தொடர்ந்து நடித்துவந்தார்.

மீனாவின் மகள் நைனிகா

மீனாவின் மகள் நைனிகா

இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இவர் விஜய்யின் தெறி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தெறி படத்தில் இவரது நடிப்பு சிறப்பாக பேசப்பட்டது. விஜய்க்கு ஈடுகொடுத்து சிறப்பாக நடித்திருந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் பிரச்சினை காரணமாக உயிரிழந்தார்.

நுரையீரல் பாதிப்பு

நுரையீரல் பாதிப்பு

கடந்த 6 மாதங்களாக நுரையீரல் பாதிக்கப்பட்ட வித்யாசாகர் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை இருந்த நிலையில், நுரையீரல் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சுயநினைவை இழந்துள்ளார்

95 நாட்களாக சுயநினைவு இழப்பு

95 நாட்களாக சுயநினைவு இழப்பு

இதனிடையே கடந்த 95 நாட்களாக சுயநினைவை இழந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த வித்யாசாகர், நினைவு திரும்பாமலேயே கடந்த செவ்வாயன்று உயிரிழந்துள்ளார். கடந்த புதன்கிழமை இவரது உடல் தகனம் செய்யப்பட்டது. ரஜினி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் நேரில் அவருக்கு அஞ்சலி செலுத்தி மீனாவிற்கு ஆறுதல் தெரிவித்தனர்.

3 மாதங்கள் அப்பாவிடம் பேசாத நைனிகா

3 மாதங்கள் அப்பாவிடம் பேசாத நைனிகா

இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக நைனிகா தன்னுடைய அப்பாவிடம் பேசாமல் இருந்துள்ளார். சுயநினைவை இழப்பதற்கு முன்பாக நைனிகாவிடம் அவர் பேசியுள்ளார். தொடர்ந்து சுயநினைவை இழந்த வித்யாசாகர் தன்னுடைய மகளுடன் பேசாமலேயே உயிரிழந்துவிட்டார்.

மகள்மீது கொள்ளை பிரியம்

மகள்மீது கொள்ளை பிரியம்

வித்யாசாகருக்கு தன்னுடைய மகள் மீது கொள்ளை பிரியமாம். நைனிகாவிற்கும் அப்படித்தான் என்ற நிலையில், மருத்துவமனையில் இருந்து தன்னுடைய அப்பா விரைவில் வீடு திரும்புவார் என்ற எதிர்பார்ப்புடன் இருந்த நைனிகா தற்போது மிகவும் உடைந்து போயுள்ளதாக சமீபத்தில் கலா மாஸ்டரும் கவலை தெரிவித்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X