வந்துட்டேன்னு சொல்லு நானும் ரிலீஸுக்கு வந்துட்டேன்னு சொல்லு... கலக்கும் பிரபல கனவுக்கன்னி!

சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடிகை மீனா நடித்து வருகிறார்.

90ளில் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருந்த மீனாவுக்கு இன்றும் சற்றும் மவுசு குறையாமல் அதே ரசிகர்கள் அப்படியே இருக்க மலையாளத்திலும் இவர் பல படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் மீனா இப்பொழுது இன்ஸ்டாகிராமில் முதல் ரீல் வீடியோவை பதிவிட்டு கலக்கி வருகிறார்.

அன்புள்ள ரஜினிகாந்த்

அன்புள்ள ரஜினிகாந்த்

நடிகை மீனாவை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது 90களில் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருந்த மீனா தமிழ்,தெலுங்கு, மலையாளம்,கன்னடம் உட்பட பல மொழிகளில் எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் ரஜினிகாந்துடன் அன்புள்ள ரஜினிகாந்த் படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தியிருப்பார்.

குணச்சித்திர கதாபாத்திரங்களில்

குணச்சித்திர கதாபாத்திரங்களில்

முத்து, தாய்மாமன்,நாட்டாமை, சேதுபதி, ஐபிஎஸ் எஜமான், என் ராசாவின் மனசிலே, பாரதி கண்ணம்மா, ஆனந்த பூங்காற்றே, ரிதம் என பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் நடிகை மீனா இப்பொழுது அம்மா,அக்கா உள்ளிட்ட குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இரண்டாம் பாகம்

இரண்டாம் பாகம்


ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த திரைப்படத்தில் முக்கியமான ரோலில் மீனா நடித்து வருகிறார் . திரிஷ்யம் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்டது. மலையாளத்தை தொடர்ந்து இந்த திரைப்படம் தெலுங்கில் உருவாகி வருகிறது.

கேட்வாக்

கேட்வாக்

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் மீனா எப்போதும் ஆக்டிவாக இருப்பதால் லேட்டஸ்ட் புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருக்க தற்பொழுதுள்ள இளம்பெண்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் ரீல்ஸ் செய்தும் அசத்தி வருகிறார். முதல் வீடியோவாக பிங்க் நிற டிரஸ்ஸில் கேட்வாக் போட்டுக் கொண்டு செம ஸ்டைலிஷாக என்றும் இளமையுடன் ஸ்டைலிஷ் தமிழச்சியே பாடலுக்கு நடந்து வரும் வீடியோவை இது என்னுடைய முதல் ரீல்ஸ் வீடியோ என பதிவிட்டு இருக்க தற்பொழுது வைரலாகி வருகிறது.

Read more about: meena மீனா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X