'விண்வெளி போற மாதிரி இருந்தாலும்..' இப்படி போனா இந்த நடிகையை யார்னு கண்டுபிடிக்கிறது கஷ்டம்தான்!

By

கொச்சி: கொரோனா கவச உடை அணிந்திருப்பது விண்வெளிக்குச் செல்வது போல இருந்தாலும் போருக்கு செல்வதை போல உணர்வதாக பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கில் மத்திய, மாநில அரசுகள் தளர்வுகளை அறிவித்துள்ளன.

அதன்படி சினிமா படப்பிடிப்புகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சில படங்களில் ஷூட்டிங் மீண்டும் தொடங்கியுள்ளது.

மோகன்லால், மீனா

மோகன்லால், மீனா

மலையாளத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம், த்ரிஷ்யம். இதில் மோகன்லால், மீனா, எஸ்தர் அனில், ஆஷா சரத் உள்பட பலர் நடித்திருந்தனர். ஜீத்து ஜோசப் இயக்கி இருந்தார். இந்தப் படம் கமல், கவுதமி நடிப்பில் தமிழில், பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது. இங்கும் ஹிட்டானது.

இரண்டாம் பாகம்

இரண்டாம் பாகம்

தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்பட பல்வேறு மொழிகளில் இந்தப் படம் ரீமேக் ஆனது. இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் த்ரிஷ்யம் 2 என்ற பெயரில் உருவாகிறது. முதல் பாகத்தில் நடித்த மோகன்லால், மீனா உள்பட பலர் இதிலும் நடிக்கின்றனர். ஜீத்து ஜோசப் இயக்குகிறார்.

கொரோனா சோதனை

கொரோனா சோதனை

இதன் ஷூட்டிங், கடந்த சில நாட்களுக்கு முன் கொச்சியில் தொடங்கியது. படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உட்பட அனைவரும் கொரோனாவுக்காகத் தனிமைப்படுத்தப் பட்டனர். பின்னர் கொரோனா பரிசோதனைக்குப் பிறகு படப்பிடிப்பில் கலந்து கொண்டனர்.

நடிகை மீனா

நடிகை மீனா

கடந்த சில நாட்களுக்கு முன்பு இதில் கலந்துகொண்ட, மோகன்லாலுக்கும் கொரோனா பரிசோதனை நடந்தது. இந்நிலையில் இதன் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகை மீனா நேற்று முன் தினம் சென்னையில் இருந்து விமானம் மூலம் கொச்சி சென்றார். விமானத்தில் பிபிஇ கிட் என்கிற கொரோனா கவச உடை அணிந்து அவர் பயணம் செய்தார்.

ஏர்போர்ட் அமைதி

ஏர்போர்ட் அமைதி

இதுபற்றி அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது: இந்த உடையில் விண்வெளிக்கு செல்வது போல தெரிந்தாலும் நான் போருக்கு செல்வதை போல உணர்கிறேன். 7 மாதங்களுக்கு பிறகான எனது பயணம் இது. ஏர்போர்ட் அமைதியாக இருந்தது ஆச்சரியமாக இருந்தது.

துடைக்க முடியவில்லை

துடைக்க முடியவில்லை

அதை விட ஆச்சரியம், என்னைப் போல யாரும் உடை அணியாதது. இது மிகவும் அசவுகரியமான உடை. அதிக உஷ்ணமாகவும் மூச்சு விடமுடியாமலும் இறுக்கமாக இருந்தது. குளிர்ந்த காற்று இருந்தபோதும் உடலில் வியர்த்துக் கொட்டியது. கையுறை அணிந்ததால் முகத்தை கூட துடைக்க முடியவில்லை.

Recommended Video

Government சொன்ன கேக்கமாடிங்களா? | Quarantine | Lock Down
அதிகரிக்கும் மரியாதை

அதிகரிக்கும் மரியாதை

இந்தக் கடினமான உடையை அணிந்து கொண்டு நமது சுகாதாரப் பணியாளர்கள் நமக்காக பணியாற்றுவதைப் பார்க்கும்போது அவர்கள் மீதான மரியாதை அதிகரிக்கிறது. உங்களது தன்னலமற்ற சேவைக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு நடிகை மீனா கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X