Don't Miss!
- News மோடி ஆட்சிக்கு வந்தால் அனைத்து ரயில் பயணிகளுக்கும் கன்பார்ம் டிக்கெட்- ரயில்வே அமைச்சர்
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Sports LSG v CSK-சிஎஸ்கேக்கு பாதகமாக விழுந்த டாஸ்..பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்..பேட்டிங்கிலும் சர்பரைஸ்
- Automobiles வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கௌதமிக்கு பதிலாக கமலுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள முன்னனி நடிகை!
சென்னை: மோகன்லால், மீனா உள்ளிட்டோர் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் திரிஷ்யம்.
சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி முதல் பாகத்தை போலவே வெற்றி பெற்றது.
யாரும் எதிர்பாராத வகையில் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியான திரிஷ்யம் 2 பெரிய ஹிட் ஆனது.
கமல் - கௌதமி
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மலையாள மொழியில் பெரிய வெற்றி படமாக அமைந்த திரிஷ்யம், தமிழ் மொழியில் பாபநாசம் எனவும் மற்றும் பல மொழிகளில் மறு ஆக்கம் செய்யப்பட்டு நல்ல ஆதரவை பெற்றது. தமிழில் கமல்ஹாசன், கௌதமி, நிவேதா தாமஸ், எஸ்தர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
மீண்டும் மறுஆக்கம்
தமிழில் பாபநாசம் பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில், திரிஷ்யம் - 2 வையும் பாபநாசம் - 2 என்ற தலைப்பில் மறு ஆக்கம் செய்யவுள்ளனர். பாபநாசம் முதல் பாகத்தை போலவே இதையும் ஜீத்து ஜோசப்பே இயக்குவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
40 நாட்கள் கால்ஷீட்
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் குறித்து ஏதும் அறிவிப்பு வெளியாகவில்லை. கமலுக்கு விக்ரம், இந்தியன் 2 என படங்கள் உள்ள நிலையில் அதை முடித்த பின்னரே பாபநாசம் 2ம் பாகத்தில் நடிக்கவுள்ளார் என தெரிகிறது. இதற்கு கமல் 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
கௌதமி மறுப்பு
பாபநாசம் முதல் பாகத்தில் கமல் - கௌதமி ஜோடியாக நடித்திருந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் நடிக்க கௌதமி மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரிகிறது. கௌதமிக்கு பதிலாக திரிஷ்யம் படத்தில் நடித்துள்ள முன்னனி நடிகை மீனாவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.