Meena: விஜய்க்காக தான் அந்த மாதிரி பண்ணேன்... ‘2 முறை’ சான்ஸ் கிடைத்தது... மீனா சொன்ன ரகசியம்!

சென்னை: நடிகை மீனா சினிமாவில் அறிமுகமாகி 40 ஆண்டுகள் ஆனதை சமீபத்தில் கொண்டாடி மகிழ்ந்தார்.

மீனா 40 என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ரஜினி, கமல், விஜயகாந்த், அஜித் போன்ற முன்னணி ஹீரோக்களுடனும் நடித்துள்ள மீனா, இதுவரை விஜய்யுடன் ஜோடி சேரவில்லை.

 Meena opens up about dancing with Vijay in the Shahjahan film

விஜய்யுடன் நடிக்க முடியாமல் போனது குறித்து நடிகை மீனா மனம் திறந்துள்ளார்.

விஜய்க்காக தான் அந்த மாதிரி பண்ணேன்
திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா, 90களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாகவும், முன்னணி நடிகையாகவும் வலம் வந்தார். தற்போதும் பிஸியாக நடித்து வரும் மீனா, சமீபத்தில் தான் சினிமாவில் தனது 40வது ஆண்டு பயணத்தை பிரம்மாண்டமாக கொண்டாடினார்.

கணவரை இழந்துவிட்டபோதும், அதிலிருந்து மீண்டு வருவதில் மீனா அதிக கவனம் செலுத்தி வருகிறார். ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்து, பின்னர் அவருக்கே ஜோடியாக நடித்த பெருமை இவருக்கு உண்டு. அதேபோல், கமல், விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக், அஜித், பார்த்திபன், முரளி போன்ற கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.

 Meena opens up about dancing with Vijay in the Shahjahan film

ஆனாலும், விஜய்யுடன் மட்டும் இதுவரை மீனா ஜோடியாக நடிக்கவில்லை. அதேநேரம் ஷாஜஹான் படத்தில் இடம்பெற்ற 'சரக்கு வச்சிருக்கேன்' பாடலில் விஜய்யுடன் இணைந்து செம்மையான ஒரு குத்தாட்டம் போட்டுள்ளார் மீனா. இந்தப் படம் வெளியான போது, விஜய்க்காகவே மீனா இப்படி ஐட்டம் சாங்கில் நடித்துள்ளதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில், மீனா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக சென்றிருந்தார். அப்போது அவரிடம் விஜய்யுடன் ஜோடியாக நடிக்காத போது, அவருடன் ஐட்டம் பாடலுக்கு மட்டும் நடனமாடியது ஏன் என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து சிரித்தபடியே பதிலளித்த மீனா, அந்த பாட்டுக்கு எப்படி ஆட வேண்டும் என முதலில் எனக்கு தெரியாது. ஆனால், அதன் பின்னர் விஜய்யுடன் போட்டிப் போட்டு நடனமாடியதாகக் கூறினார்.

விஜய்க்காகவே அந்தப் பாடலில் கமிட்டான மீனா, அவருக்கு இணையாக ஆட வேண்டும் என ரொம்பவே ரிஸ்க் எடுத்தாராம். அதேபோல், பிரியமுடன், பிரண்ட்ஸ் இந்த இரண்டு படங்களிலும் மீனாவை தான் விஜய்க்கு ஜோடியாக நடிக்க வைக்க முயற்சிகள் நடந்ததாம். ஆனால், பிஸியாக இருந்ததால், இரண்டு படங்களையும் மறுத்துவிட்டாராம் மீனா. இரண்டு முறையும் கால்ஷீட் பிரச்சினையால் தான் விஜய்யுடன் நடிக்க முடியாமல் போனதாக மீனா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X