Don't Miss!
- News
"முக்கோண இடி".. வீசும் எடப்பாடி புயல்.. சுழட்டியடிக்கும் சூறாவளி திமுக.. பாஜக டோட்டலா சேஞ்ச் ஆகுதே?
- Sports
பிரியாணி கிடைக்கலனா ஹோட்டலுக்கே போக மாட்டீங்களா? செய்தியாளர் கேள்விக்கு கடுப்பான வாசிங்டன் சுந்தர்
- Lifestyle
பெண்களின் குறைந்த பாலியல் ஆசையை உடனடியாக அதிகரிக்க இந்த 5 உணவுகளில் ஒன்று போதுமாம்...!
- Automobiles
12 ஆயிரம் குதிரைகளின் பவரை கொண்ட ரயில் இன்ஜின்! உலக அரங்கில் இந்தியாவிற்கு கிடைத்த கவுரவம்!
- Technology
ரூ.15,000-க்கு கீழ் வாங்க கிடைக்கும் சிறந்த 5G போன்கள்: இதோ பட்டியல்.! நம்பி வாங்கலாம்.!
- Finance
ஆப்பிள் மட்டும் ஊழியர்களை பணிநீக்கம் செய்யாதது ஏன்..? 3 முக்கிய காரணம்..கூகுள்,மைக்ரோசாப்ட் ஷாக்..!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
- Travel
தாஜ்மஹாலில் நடைபெறும் 10 நாள் வண்ணமயமான திருவிழாவில் நீங்கள் கலந்துக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு!
அப்பாவை மறக்கமுடியாமல் அழுகிறாள் மீனாவின் மகள்..பார்க்கவே பாவமாக இருக்கு..கலங்கும் கலா மாஸ்டர்!
சென்னை : மீனாவின் மகள் நைனிகா அப்பாவை மறக்கமுடியாமல் அழுகிறாள் பார்க்கவே பாவமாக இருக்கு என்று கண்ணீருடன் கலா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் மீனா. ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த இவர், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இவர் கடந்த 2009ம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த ஐ.டியில் பணிபுரிந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். நைனிகா தெறி படத்தில் விஜய்யின் மகளாக நடித்துள்ளார்.
கணவரின் புகைப்படம் அருகில் கலங்கியபடி நின்ற மீனா.. அமைச்சர் பொன்முடி நேரில் ஆறுதல்!

கொரோனா
சில மாதங்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி இருந்தவர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் மீனாவும் அவரது கணவர் வித்யாசாகரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின் குணமடைந்தனர். இதையடுத்து, அவருக்கு நுரையீரல் தொடர்பான பிரச்சனை எழுந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

உயிரிழந்தார்
அவரது உடல்நிலை பெருமளவில் பாதிக்கப்பட்டதை அடுத்து நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். ஆனால் நுரையீரல் தானம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் திடீரென வித்யாசாகர் உடல்நிலை மோசமடைந்து ஜூன் 28ந் தேதி இரவு 7 மணி அளவில் உயிரிழந்தார். இது ஒட்டுமொத்த திரைத்துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

நேரில் ஆறுதல்
இந்த துயர செய்தியை கேள்விப்பட்ட உடன் ரஜினிகாந்த், மீனாவை தொலைபேசியில் அழைத்து ஆறுதல் கூறினார். மேலும், ரஜினிகாந்த், குஷ்பு, ரம்பா, மன்சூர் அலிகான் என ஏராளமானோர் வித்யாசாகரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு மீனாவிற்கு ஆறுதல் தெரிவித்தனர். சென்னை, பெசன்ட் நகரில் உள்ள மயானத்தில் வித்யாசாகரின் உடல் தகனம் செய்யப்படுகிறது.

எதிரிக்கு கூட இந்த நிலை வரக்கூடாது
மீனாவின் கணவர் உயிரிழந்த செய்தியை கேள்விபட்ட கலா மாஸ்டர் முதல் ஆளாக அவரது வீட்டிற்கு சென்று, மீனாவின் சசோதரி போல இறுதி வரை அவருடனே இருந்தார். இதையடுத்து, யூ ட்யூப் சேனல் ஒன்றுடன் பேட்டி அளித்த கலா மாஸ்டர், எதிரிக்கு கூட இந்த நிலை வரக்கூடாது. மீனாவின் கணவர் மிகவும் நல்ல மனிதர் என கண்ணீருடன் கூறினார்.

பார்க்கவே பாவமா இருக்கு
மேலும், மீனாவின் மகள் 10 வயதுதான் ஆகிறது. அவருக்கு அப்பா இறந்துவிட்டார் என்பது முதலில் தெரியாது அவருக்கு புரியவைக்கவே தாங்கள் மிகவும் சிரமப்பட்டோம். அப்பாவை மறக்கமுடியாமல் அழுது கொண்டே இருக்கிறாள் அவளை பார்க்கவே பாவமாக இருக்கு, மேலும், நைனிகாவை பார்த்து பார்த்து மீனாவும் கலங்குகிறார் எங்களுக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்பதே தெரியவில்லை என வருத்தத்துடன் கூறினார் கலா மாஸ்டர்.