மின் மயானத்தில் கதறிய மீனா... வித்யாசாகரின் உடல் தகனம் செய்யப்பட்டது !

சென்னை : மீனாவின் கணவர் வித்யாசாகரின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Recommended Video

Meena Husband இறுதிச்சடங்கு..முன்னின்று நடத்தும் பிரபலங்கள்*Celebrity

நடிகை மீனா சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கும் போதே, பெங்களூருவை சேர்ந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். நைனிகா தெறி படத்தில் விஜய்யின் மகளாக நடித்தார்.

நடிகை மீனா சினிமாவில் பிஸியான நடித்துக்கொண்டு இருக்கும் போதே, பெங்களூருவை சேர்ந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். நைனிகா தெறி படத்தில் விஜய்யின் மகளாக நடித்தார்.

நுரையீரல் பாதிப்பு

நுரையீரல் பாதிப்பு

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. ஏற்கனவே வித்யாசாகர் நுரையீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பும் ஏற்பட்டதை அடுத்து அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.

நேற்றிரவு உயிரிழந்தார்

நேற்றிரவு உயிரிழந்தார்

அவரது உடல்நிலை பெருமளவில் பாதிக்கப்பட்டதை அடுத்து நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். ஆனால் நுரையீரல் தானம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பும் தீவிரமடைந்ததை அடுத்து வித்யாசாகர் உடல்நிலை மோசமானதால், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 7 மணிக்கு அவர் காலமானார்.

ரஜினி நேரில் ஆறுதல்

ரஜினி நேரில் ஆறுதல்

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகரின் மரணத்திற்கு பல திரைப்பிரபலங்கள் நேரில் வந்து மீனா மற்றும் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். நடிகை மீனா வீட்டிற்கு நடிகை ரம்பா முதல் ஆளாய் வந்தார். அவரை தொடர்ந்து நடன இயக்குநர் கலா மாஸ்டர், குணசித்திர நடிகை லட்சுமி உள்ளிட்ட பலரும் நேரில் வந்து துக்கத்தில் பங்கெடுத்தனர். மீனாவின் கணவர் உயிரிழந்த செய்தியை கேள்விப்பட்ட ரஜினிகாந்த் மீனாவை தொலைபேசியில் அழைத்து ஆறுதல் கூறியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் மீனாவின் கணவருக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார் ரஜினிகாந்த்.

தகனம் செய்யப்பட்டது

தகனம் செய்யப்பட்டது

வித்யாசாகரின் உடல் கொட்டூர்புரத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் பெசன்ட் நகர் மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது. மீனாவின் வீட்டில் ஆண்கள் யாரும் இல்லாததாலும், அவருக்கு ஆண் வாரிசு இல்லாததாலும், மீனா மற்றும் அவரது மகள் நைனிகாவுடன் சேர்ந்து இறுதிச்சடங்குகளை செய்தனர்.அவர்களின் குடும்ப முறைப்படி வித்யாசாகரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

ஏராளமானோர் இரங்கல்

ஏராளமானோர் இரங்கல்

கதறி அழுதபடி கலங்கி நின்ற மீனாவுக்கு என்ன ஆறுதல் சொல்வதென்று தெரியாமல் அங்கிருந்தவர்கள் கலக்கம் அடைந்தனர். பெசன்ட் நகர் மயானத்தில் நடிகை ரம்பா மற்றும் கலா மாஸ்டர் இறுதி வரை மீனாவுடன் இருந்து அவருக்கு ஆறுதல் கூறினர். மீனா அவரின் மகள் மற்றும் குடும்ப உறவினர்களுக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களது ஆறுதல் செய்திகளை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டும் வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X