இப்போ வருத்தப்பட்டு என்ன பண்றது.. மிஸ் பண்ணிட்டேன்… நடிகை மீனா வேதனை !
சென்னை : தனது கண் அழகாலும், நடிப்பாலும் பல கோடி ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தவர் மீனா.
90ஸ் கிட்ஸ்களின் கனவு தேவதையாக வலம் வந்து வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார் மீனா.
ரஜினிகாந்த்,கமல்,சரத்குமார்,விஜயகாந்த்,அஜித், விஜய் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.

கண்ணழகி
1981ம் ஆண்டு, துறுதுறுப்பான செய்கையாளும், அழகாளும் சிவாஜியின் கண்களை ஈர்த்தார் மீனா. இதையடுத்து, மேஜர் சுந்தர் ராஜன் இயக்கத்தில் உருவான நெஞ்சங்கள் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது அறிமுகத்தை கொடுத்தார். அந்த திரைப்படம் வெற்றி பெற்றத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அளவில் பெயரை பெற்றுத்தந்தது.

கதாநாயகியாக
1990ல் புதிய கதை படத்தில் முதன்முறையாக ஹீரோயினாக அறிமுகமாகி கொடிகட்டி பறந்தார் மீனா. இதையடுத்து ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக முத்து படத்தில் நடித்து ஒரு முக்கிய இடத்தை பிடித்து வெற்றி நாயகியாக வலம் வந்தார். நடிப்பில் பிஸியாக இருக்கும் போதே திருமணம் செய்து கொண்ட மீனா, திருமணத்திற்கு பிறகு குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

திரை பயணம்
திரைத்துறையில் நுழைந்து 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் மீனா இதுகுறித்து சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், சினிமாவில் 40 ஆண்டுகளை நிறைவு செய்வது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியுள்ளார். இவை அனைத்தும் என் ரசிகர்களான உங்களத்தான் சாத்தியம் என்று கூறியுள்ளார்.
Recommended Video

கால்ஷீட் பிரச்சினை
தனது திரைப்பட அனுபவங்களை பகிர்ந்த மீனா, படையப்பா படத்தில் சௌந்தர்யா கதாபாத்திரத்தில் நான் நடிக்க வேண்டியது கால்ஷீட் பிரச்சினையால் நடிக்க முடியாமல் போனது, மேலும் தேவர்மகன் படத்தில் ரேவதி கதாபாத்திரமும், அதேபோல வாலி படத்தில் சிம்ரன் கதாபாத்திரத்திலும் நான் நடிக்க வேண்டிய படங்கள் என்று கூறினார்.

மீனா வருத்தம்
40 ஆண்டு திரைவாழ்க்கையில பல வெற்றிப்படங்களை கொடுத்திருந்தாலும், இந்த படத்தை மிஸ் பண்ணிட்டோமே என்ற வருத்தம் எனக்குள்ள இருந்துகிட்டே இருக்கு என்று மீனா வருத்தத்துடன் கூறினார். அவரது நடிப்பில் கடைசியாக மலையாளத்தில் திரிஷ்யம் 2 படம் வெளியாகி வெற்றிப் பெற்றள்ளது.


Click it and Unblock the Notifications











