அட்டகாசம் தான் போங்க.. அண்ணாத்த டப்பிங்கை ஆரம்பித்த மீனா.. எப்படி இருக்காரு பாருங்க!

சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் குழந்தை நட்சத்திரமாக ரஜினியுடன் இணைந்து நடித்த மீனா வளர்ந்து ஆளாகி அவருக்கே ஜோடியாகவும் நடித்து விட்டார்.

தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ரஜினிகாந்த் உடன் அண்ணாத்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் மீனா தனது போர்ஷன் டப்பிங் பணிகளை தொடங்கி உள்ளார்.

அன்புள்ள ரஜினிகாந்த்

அன்புள்ள ரஜினிகாந்த்

1984ம் ஆண்டு இயக்குநர் நடராஜ் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தி இருந்தார் நடிகை மீனா. ரஜினி அங்கிள் என வாயாற கூப்பிட்டு நடித்த மீனா சூப்பர் ஸ்டாருக்கே ஜோடியாவார் என யாருமே எதிர்பார்க்கவில்லை.

சூப்பர் ஸ்டாருக்கு ஜோடி

சூப்பர் ஸ்டாருக்கு ஜோடி

1993ம் ஆண்டு இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் வெளியான எஜமான் படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்தார் நடிகை மீனா. எஜமான் படத்தில் சூப்பர்ஸ்டாருக்கு ஜோடியாக கச்சிதமாக நடித்ததால் தொடர்ந்து ரஜினியுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பு மீனாவுக்கு கிடைத்தது.

வீரா படத்தில்

வீரா படத்தில்

எஜமான் படத்தைத் தொடர்ந்து அடுத்த ஆண்டே வெளியான வீரா படத்திலும் சூப்பர்ஸ்டாருக்கு ஜோடியானார் நடிகை மீனா. ரோஜா மற்றும் மீனா என இரு ஹீரோயின்களுடன் ரஜினி நடித்த வீரா படத்தை இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா காமெடி கலந்த என்டர்டெயின்மென்ட் படமாக இயக்கி இருந்தார்.

ஜப்பானில் ரசிகர்கள்

ஜப்பானில் ரசிகர்கள்

1995ம் ஆண்டு இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான முத்து திரைப்படத்திலும் மீண்டும் மீனா ஜோடி சேர்ந்து நடித்து கலக்கினார். ஜப்பான் ரசிகர்களுக்கும் இந்த படம் ரொம்பவே பிடித்துப் போக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு அங்கே மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாகி இன்றும் ரஜினியின் மவுசு குறையாமல் இருக்கிறது.

கடைசியாக குசேலன்

கடைசியாக குசேலன்

சார்பட்டா பரம்பரை படத்தில் ரங்கன் வாத்தியாராக கலக்கிய நடிகர் பசுபதி நடிப்பில் வெளியான குசேலன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மீனா நடித்திருப்பார். ரஜினிகாந்த் இந்த படத்தில் சூப்பர்ஸ்டார் அசோக் குமார் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். குசேலன் படத்திற்கு பிறகு அண்ணாத்த படத்தின் மூலம் மீண்டும் ரஜினி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் மீனா.

4 ஹீரோயின்கள்

4 ஹீரோயின்கள்

மீனா, குஷ்பு, நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் என இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் மொத்தம் 4 ஹீரோயின்கள். இந்த படத்தில் ரஜினிக்கு யார் தான் ஜோடி என்கிற மிகப்பெரிய கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. தர்பார் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த நயன்தாரா தான் ஜோடி என்றும் மீனா மற்றும் குஷ்பு அத்தை மகள்கள் என்றும் பல தரப்பட்ட கதைகள் கிளம்பி உள்ளன.

அண்ணாத்த டப்பிங்

அண்ணாத்த டப்பிங்

இந்நிலையில், அண்ணாத்த படத்தின் டப்பிங் பணியை நடிகை மீனா ஆரம்பித்துள்ளார். இயக்குநர் சிறுத்தை சிவா உடன் டப்பிங் தியேட்டரில் நடிகை மீனா இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

அதே அழகு

அதே அழகு

இத்தனை வருடங்கள் ஆனாலும் அதே அழகுடன் நடிகை மீனா இருந்து வருவது ரசிகர்களுக்கு ஆச்சர்யமான ஒன்று தான். டப்பிங் தியேட்டரில் இருந்தபடியே நடிகை மீனா கொடுத்திருக்கும் செம போஸ் ரசிகர்களுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸாக அமைந்துள்ளது.

த்ரிஷ்யம் ஹீரோயின்

த்ரிஷ்யம் ஹீரோயின்

இந்த ஆண்டு மோகன்லால் நடிப்பில் அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியான த்ரிஷ்யம் 2ம் பாகத்திலும் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிகை மீனா நடித்திருந்தார். மேலும், தெலுங்கில் உருவாகி வரும் அந்த படத்தின் ரீமேக் படத்திலும் நடிகை மீனா தான் நடிகர் வெங்கடேஷுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

கமலுடன் ஜோடி சேர்வாரா

கமலுடன் ஜோடி சேர்வாரா

த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிகை கெளதமி நடித்திருந்தார். ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக கெளதமி இரண்டாம் பாகத்தில் நடிக்க மாட்டார் என்பது உறுதியாகி உள்ளது. இதனால் இரண்டாம் பாகத்தில் கமலுடன் நடிகை மீனா ஜோடி சேர்ந்து நடிக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

அண்ணாத்த தீபாவளி

அண்ணாத்த தீபாவளி

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் முடிந்து சீக்கிரமே தியேட்டர்கள் திறக்கப்பட்டால் திட்டமிட்டபடியே அண்ணாத்த தீபாவளியை ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.

விஸ்வாசம் வெற்றி

விஸ்வாசம் வெற்றி

சிறுத்தை படத்திற்கு பிறகு நடிகர் அஜித்தை வைத்து இயக்குநர் சிவா இயக்கிய வீரம் படம் மட்டுமே மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன் பிறகு அஜித்தை வைத்து அவர் எடுத்த வேதாளம் மற்றும் விவேகம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. கடைசியாக வெளியான விஸ்வாசம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. அதே அளவுக்கு வெற்றியை அண்ணாத்த படமும் அள்ளும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தர்பார் தோல்வி

தர்பார் தோல்வி

தர்பார் பட தோல்வியை சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் நடிகர் ரஜினிகாந்த்தும் உள்ள நிலையில், நிச்சயம் அண்ணாத்த படம் சூப்பர் ஸ்டாருக்கு மிகப்பெரிய கமர்ஷியல் ஹிட் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அண்ணாத்த படத்தை முடித்து விட்டு அடுத்ததாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநர் படத்தில் ரஜினிகாந்த் நடிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. நடிகர் தனுஷும் ரஜினிகாந்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X