மத்த நடிகர்கள் அஜித் காலை கழுவி கும்பிடணும்: டிவி நடிகையின் பரபர போஸ்ட்
ஹைதராபாத்: தெலுங்கு சீரியல் நடிகை அஜித்தை பற்றி இன்ஸ்டாகிராமில் போட்டுள்ள போஸ்ட் பலரையும் வியக்க வைத்துள்ளது.
சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விஸ்வாசம் படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. வழக்கத்திற்கு மாறாக படப்பிடிப்புக்கு இடையே அஜித் தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.
அஜித்துடன் நான் என்று கூறி ஏகப்பட்ட ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புகைப்படம் வெளியிட்டுள்ளனர்.

மீனா வாசு
தெலுங்கு டிவி சீரியல் நடிகையான மீனா வாசு ஹைதராபாத்தில் அஜித்தை சந்தித்து பேசியதுடன் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார். தனக்கு பிடித்த நடிகருடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். புகைப்படத்தில் ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் அந்த இன்ஸ்டாகிராமில் அஜித் பற்றி எழுதியிருப்பதை பார்த்தால் தலக்கே அது பிடிக்காது.
அஜித்
நான் என் கெரியரில் அஜித் போன்ற ஒரு ஆளை பார்த்ததே இல்லை. அந்த அளவுக்கு இனிமையான, எளிமையான ஆள். ஹிட் கொடுத்துவிட்டால் ஆட்டிடியூட் காட்டும் பல கலைஞர்களை பார்த்துள்ளேன். ஈகோ இருந்தால் வெற்றி நிலைக்காது. அத்தகையவர்கள் அஜித்தின் காலை கழுவி, தொட்டு வணங்க வேண்டும். அப்படி செய்தால் அவரின் குணத்தில் ஒரு 10 சதவீதமாவது அவர்களுக்கு வரும். ஹாட்ஸ் ஆஃப் தல என்று மீனா வாசு இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

பிடிக்காது
தன் காலை கழுவி வணங்கினால் தான் நல்ல குணம் வரும் என்று அஜித் ஒருபோதும் நினைக்க மாட்டார். அப்படி இருக்கும்போது மீனா வாசு போட்டுள்ள போஸ்ட்டை பார்த்தால் அவரே அதை நீக்குமாறு கூறுவார். இதற்கிடையே மீனா வாசுவின் போஸ்ட்டை பார்த்து சிலர் பாராட்டியுள்ளனர், சிலர் அவரை கேவலமாக திட்டியுள்ளனர், சிலர் அறிவுரை வழங்கியுள்ளனர்.

விஜய் ரசிகர்கள்
இந்த மாதிரி போஸ்ட் போட வேண்டியது...அப்புறம் விஜய் ரசிகர்கள் எங்கள கிழி கிழின்னு கிழிக்கிறாங்கன்னு போயிட்டு போலீஸ் கிட்ட அழ வேண்டியது என்று ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











