கோட் படத்தில் நடித்தது பெரிய தப்பு.. மன அழுத்தம் தான் மிச்சம்.. ஆதங்கப்பட்ட மீனாட்சி சௌத்ரி!

சென்னை: ஹரியானாவை சேர்ந்த நடிகை மீனாட்சி சௌத்ரி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழி படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது இவர் அளித்திருக்கும் பேட்டியில், கோட் திரைப்படத்தில் நடித்திருக்கவே கூடாது, அதில் நடித்ததால் மன அழுத்தம்தான் மிச்சம் என்று கூறியுள்ளார். அவரின் இந்த பேட்டி இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மாடல் அழகியான மீனாட்சி சௌத்ரி ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவில் தனது பயணத்தை தொடங்கினார். அதைத்தொடர்ந்து, தமிழில் விஜய் ஆண்டனி நடித்த திரில்லர் திரைப்படமான கொலை படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். பின் ஆர் ஜே பாலாஜி உடன் சிங்கப்பூர் சலூன் படத்தில் நடித்தார். இதன் பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான கோட் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், சினேகா, லைலா ஆகியோர் நடித்திருந்தனர்.

vijay goat meenakshi chaudhary

தி கோட் திரைப்படம்: இத்திரைப்படத்தில் விஜய், அப்பா, மகன் என இரண்டு விதமான ரோலில் நடித்திருந்த நிலையில், மீனாட்சி சௌத்ரி மகனுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி என்கிற ரோலில் நடித்திருந்தார். ஆனால், அந்த படத்தில் ஒப்புக்கு ஒரு பாடலுக்கும், ஒரு சில காட்சியில் மட்டுமே வரும், மீனாட்சி சௌத்ரி பாதியிலேயே மகன் விஜயால் கொல்லப்பட்டுவிடுவார். இந்த கதாபாத்திரம் ஒப்புக்கு என்று இருந்ததால், இணையத்தில் பலரும், ஸ்ரீநிதி கதாபாத்திரமே தேவையில்லை என்று ட்ரோல் செய்தனர். இதனால், மன அழுத்தத்திற்கு ஆளான மீனாட்சி சௌத்ரி, கோட் படத்தில் நடித்து இருக்கவே கூடாது என்று தெரிவித்துள்ளார்.

மீனாட்சி சௌத்ரி: இதுகுறித்து ஊடகம் ஒன்றில் பேசிய மீனாட்சி சௌத்ரி, நான் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்ததற்காக பலர் என்னை கேலியும் கிண்டலும் செய்தனர். இணையத்தில் வந்த ட்ரோல்களால் ஒரு வாரம் மனஅழுத்தத்தில் இருந்தேன். ஆனால், துல்கர் சல்மானுடன் நடித்த லக்கி பாஸ்கர் படத்தை பார்த்து விட்டு பலர் என்னை பாராட்டினார்கள். அப்போதுதான் இனி நல்ல கதை அம்சம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என முடிவு செய்தேன் என கூறியுள்ளார்.

விஜய் நடித்த கோட் திரைப்படம் தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று உலக அளவில் 440 கோடி வசூலை அள்ளிய போதும், விஜய்க்கு ரசிகர்கள் அதிகமாக இருக்கும் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் மோசமான விமர்சனங்களையே பெற்று தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X