»   »  உதவி இயக்குனருக்கு பளார் கொடுத்த மீனாட்சி... சிறைபிடித்த படக்குழுவினர்

உதவி இயக்குனருக்கு பளார் கொடுத்த மீனாட்சி... சிறைபிடித்த படக்குழுவினர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: படப்பிடிப்பில் உதவி இயக்குனரை நடிகை மீனாட்சி ஓங்கி அறைந்த சம்பவம் சினிமாவுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழில் கருப்பசாமி குத்தகைதாரர் படத்தின் மூலம் அறிமுகமான மீனாட்சி தொடர்ந்து ராஜாதி ராஜா, மந்திரப் புன்னகை போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

Meenakshi Slaps Assistant Director

தற்போது நேர்முகம் என்ற படத்தில் நடித்து வருகிறார். நேற்று இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது உதவி இயக்குநர் ஒருவரை நடிகை மீனாட்சி ஓங்கி அறைந்திருக்கிறார்.

இவர் அறைந்த வேகத்தில் அந்த உதவி இயக்குநர் மயக்க நிலைக்குச் சென்றுவிட அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் மீனாட்சி மன்னிப்பு கேட்கும்வரை அவரை விடமாட்டோம் என்று கூறி அவரை சிறைபிடித்தனர்.

கடைசியில் நடிகை மீனாட்சி மன்னிப்புக் கடிதம் எழுதி படக்குழுவினரிடம் மன்னிப்புக் கேட்ட பின்னரே அவரை படக்குழுவினர் விடுவித்து இருக்கின்றனர்.

இவர் அறைந்ததில் மயங்கி விழுந்த உதவி இயக்குனருக்கு தற்போது தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறதாம்.

நடிகை மீனாட்சி உதவி இயக்குனரை அறைந்த சம்பவமும், அவரை படக்குழுவினர் சிறைபிடித்த சம்பவமும் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

English summary
Yesterday Actress Meenakshi Slapped Assistant Director in Nermugam Shooting Spot, after she asks sorry for the entire unit.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil