விக்ரம் பிரபு உடன் குத்தாட்டம் போடும் மீனாட்சி
குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்துவந்த மீனாட்சி விக்ரம் பிரபுவின் வெள்ளைக்கார துரை படத்தில் குத்தாட்ட நாயகியாக களம் இறங்கியுள்ளார்.
கோல்கட்டா மாடல் அழகியான பிங்கி சர்க்கார் கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் மீனாட்சியாக மாறினார். தொடர்ந்து விளம்பரப்படங்களில் வாய்ப்பு கிடைத்தது.
அதன் பிறகு அகம் புறம், பெருமாள், ராஜாதி ராஜா படங்களில் நடித்த மீனாட்சி கடைசியாக கரு.பழனியப்பனின் மந்திர புன்னகை படத்தில் நடித்தார். இப்போது குத்துப்பாடல் நாயகிகள் வரிசையில் இணைந்துள்ளார் மீனாட்சி.

கதாநாயகி வாய்ப்பு
சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் ஒதுங்கி இருந்த மீனாட்சி 2 வருட இடைவெளிக்கு பிறகு வந்து ஹீரோயின் வாய்ப்பு தேடினார். ஹீரோயினாக கமிட்டான படம் வில்லங்கம் இன்னும் தொடங்கவில்லை.

குத்தாட்டம் போடலாமா?
அதுவரைக்கும் ஏன் சும்மா இருக்கவேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ குத்தாட்டம் போடலாம் என்று முடிவு செய்து விட்டார் மீனாட்சி.

வெள்ளைக்கார துரை
தற்போது எழில் இயக்கி வரும் வெள்ளைக்கார துரை படத்தில் ஒரு பாட்டுக்கு ஆட்டம்போட்டுக் கொண்டிருக்கிறார். விக்ரம் பிரபு நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. கிளைமாக்சிற்கு முன்பு வரும் ஒரு குத்துப்பாடலுக்கு மீனாட்சி ஆடுகிறார்.

நம்ம ஊரு பொண்ணு
இதுபற்றி எழில் கூறியிருப்பதாவது: ஒரு பாட்டுக்கு ஆட நம்ம நேட்டிவிட்டி முகம் கொண்ட ஒருவர் தேவைப்பட்டார். மீனாட்சி சரியாக இருக்கும் என்றதால் அவரை அணுகினோம் ஒப்புக் கொண்டு ஆடி வருகிறார் என்றார்.

அக்டோபரில் ரிலீஸ்
ஜில்லா படத்துக்காக போடப்பட்ட ஷெட்டில் சில மாற்றங்களை செய்து இந்த குத்துப்பாடல் படமாக்கப்படுகிறதாம். வருகிற அக்டோபர் மாதம் வெள்ளைக்கார துரையை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் இயக்குநர் எழில்.


Click it and Unblock the Notifications











