ஊருக்கு ஒதுக்குப்புறமாக பாலியல் தொழில்... பரபரப்பு ரோலில் மீனாள்!
பாரதிராஜாவின் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் மீனாளுக்கு வித்தியாசமான பாத்திரமாம். அதாவது பாலியல் தொழில் செய்யும் பெண்ணாக அவர் நடிக்கிறாராம்.

தவமாய் தவமிருந்த வந்த மீனாள்
சேரன் கையால் குட்டுப்பட்டு நடிக்க வந்தவர் மீனாள். தவமாய் தவமிருந்து படத்தில் அவரது அண்ணியாக வந்து நடிப்பு வீச்சைக் காட்டியவர். யாருடா இந்த நடிகை என்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர்.

இயல்பான பேச்சு, இதமான அழகு
படு எதார்த்தமாகவும், இயல்பாகவும், இதமானதாகவும் உள்ள தனது பேச்சாலும், வசன உச்சரிப்பாலும், மிதமான அழகாலும் அனைவரையும் கவர்ந்தவர் மீனாள்.

தங்கர் வசம் போன தங்கமான நடிப்பு
தங்கர் பச்சான் இவரை சரியாகப் பயன்படுத்தி வருகிறார். பள்ளிக்கூடம் படத்தில் அவரது மனைவியாக வந்து போனார். சமீபத்தில் வந்த அம்மாவின் கைப்பேசி படத்திலும் அசத்தலான நடிப்பைக் கொட்டியிருந்தார்.

இப்போது பாரதிராஜாவிடம்
தற்போது பாரதிராஜாவின் இயக்கக் கையில் தஞ்சம் புகுந்துள்ளார் மீனாள். அவரது நடிப்பு உளியில் பட்டு அழகான சிற்பமாக அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் நடித்து வருகிறாராம் மீனாள்.

ஊருக்கு ஒதுக்குப்புறமாக பாலியல் தொழில்
இந்தப் படத்தில் ஒரு பாலியல் தொழிலாளியாக வருகிறாராம் மீனாள். அதாவது ஊருக்கு ஒதுக்குப்புறமாக குடிசை போட்டு பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்ணாக வருகிறாராம்.

யாருமே இப்படி நடித்திருக்க முடியாது...
என்னை யாருமே இப்படி நடிக்க வைத்ததில்லை என்று கூறும் அளவுக்கு மிக அபாரமாக நடிக்க வைத்துள்ளார் பாரதிராஜா. இப்படம் எனக்குப் பெரும் திருப்பமாக அமையும். அருமையான கேரக்டர், திருப்திகரமாக நடித்துள்ளேன் என்று கூறுகிறார் மீனாள் பூரண திருப்தியோடு.

மச்சானிலும் பார்க்கலாம்
தற்போது மச்சான் உள்ளிட்ட சில படங்களிலும் மீனாள் நடித்துக் கொண்டிருக்கிறாராம். எல்லாம் பெயர் சொல்லும் வேடங்களாம்.


Click it and Unblock the Notifications











