6 நாட்கள் நிர்வாணமாக சித்ரவதை.. ரிஸ்க் எடுத்த நாயகன்.. வெளியானது 'மீண்டும்' படத்தின் ட்ரெயிலர்!
சென்னை: சிட்டிசன் பட இயக்குநர் இயக்கியுள்ள 'மீண்டும்' படத்தின் ட்ரெயிலர் வெளியிடப்பட்டுள்ளது.
ஹீரோ சினிமாஸ் சி.மணிகண்டன் வழங்க கதிரவன் கதாநாயகனாக நடிக்கும் படம் மீண்டும். இப்படத்தை சரவணன் சுப்பையா இயக்கி உள்ளார்.
இவர் அஜீத்குமார் நடிப்பில் பரபரப்பாக பேசப்பட்ட வெற்றிப்படமான சிட்டிசன் படத்தை இயக்கியவர் ஆவார். மீண்டும் படத்தில் கதிரவன் ஜோடியாக அனகா நடித்திருக்கிறார்.

மீண்டும் - நடிகர்கள்
இவர் டிக்கிலோனா, நட்பே துணை ஆகிய படங்களில் நடித்துள்ளார். பிரணவ் ராயன், அனுராதா, துரை சுதாகர், சுபா பாண்டியன், அபிதா செட்டி, யார் கண்ணன், எஸ்.எஸ்.ஸ்டான்லி, சுப்ரமணியம் சிவா, தர்ஷினி, இந்துமதி, மணிகண்டன், கேபிள் சங்கர், ஆதர்ஷ், மோனிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்,

வைரமுத்து வரிகள்
இந்தப் படத்தில் கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதி உள்ளார். நரேன் பாலகுமாரன் இசை அமைத்திருக்கிறார். சீனிவாசன் தேவாம்சம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜா முகமது எடிட்டிங் செய்திருக்கிறார். சூப்பர் சுப்பராயன் சண்டை பயிற்சி அளித்திருக்கிறார்.

மீனவர்கள் படும் சித்ரவதை
இரண்டு தந்தை, ஒரு பெண் ஒரு குழந்தை என்ற மாறுபட்ட கதையம்சமுள்ள இப்படத்தில் கடற்படையினரிடம் சிக்கி தமிழக மீனவர்கள் படும் சித்ரவதையை படமாக்கி உள்ளனர். இந்தியா மீது மறைமுக தாக்குதல் நடத்தும் இலங்கை, சீனா பாகிஸ்தான் போன்ற நாடுகளின் விஞ்ஞான ரீதியான தாக்குதலையும் இப்படத்தில் சொல்லியிருக்கின்றனர்.
ட்ரெயிலர் வெளியீடு
பட கதாநாயகன் கதிரவன் இப்படத்தின் ஆக்ஷன் காட்சிகளில் உயிரை பணயம் வைத்து நடித்துள்ளார். இதற்காக ஆறு நாட்கள் நிர்வாணமாக சித்ரவதை செய்யப்படும் காட்சிகளில் நடித்துள்ளார். மீண்டும் படத்தின் டிரைலர் வெளியீடு மற்றும் பாடல்கள் முன்னோட்டம் நேற்று சென்னை பிரசாத் லேபில் நடந்தது.

பிரபலங்கள் பங்கேற்பு
இதில் சிறப்பு விருந்தினர்களாக பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் லியோனி, பேச்சாளர் நாஞ்சில் சம்பத், பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே, திரைப்பட இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், பேரரசு முன்னிலை வகித்து படத்தின் ட்ரெயிலரை வெளியிட்டனர்.


Click it and Unblock the Notifications











