»   »  மீராவுக்கு மேலும் ரூ15000 பைன்

மீராவுக்கு மேலும் ரூ15000 பைன்

Subscribe to Oneindia Tamil

தோஷ கழிப்பு பூஜைக்காக ரூ. 10,000 தர வேண்டும் என்று ராஜேஸ்வர் கோவில்நிர்வாகம் உத்தரவின்படி அந்தத் தொகையை மீரா ஜாஸ்மின் கோவில் நிர்வாகத்திடம்கட்டினார். இந் நிலையில் இப்போது மேலும் ரூ. 15 ஆயிரம் கோவில் பாரிகாரபூஜைக்கு வழங்கு சம்மதம் தெரிவித்துள்ளார் மீரா ஜாஸ்மின்.

கண்ணூரில் உள்ள ராஜேஸ்வர் கோவிலுக்குள் இந்துக்களை தவிர மற்ற மதத்தினர்செல்ல அனுமதி கிடையாது. ஆனால் கிறிஸ்தவரான நடிகை மீரா ஜாஸ்மின் கடந்தமாதம் கோவிலுக்குள் சென்றார்.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து தனது செயலுக்கு வருத்தம்தெரிவித்தார் மீரா. ஆனால், கோவிலை புனிதப்படுத்துவதற்கான பரிகார பூஜை செய்யரூ. 10,000 வழங்க வேண்டும் என கோவில் நிர்வாகம் கூறியது.

இதையடுத்து பணத்தை கொடுத்தனுப்பினார் மீரா.

ஆனால், இப்போது பரிகார பூஜைக்கு ரூ. 25,000 மேல் செலவாகும் என தெரிவித்தகோவில் நிர்வாகம், மேலும் ரூ.15,000 வழங்குமாறு மீரா ஜாஸ்மினை கேட்டுக்கொண்டது.

இதைத் தொடர்ந்து அந்த தொகையையும் வழங்க மீரா சம்மதம் தெரிவித்துள்ளார்.கோவிலில் 2 நாட்கள் 10 தந்திரிகள், பரிகார பூஜைகள் நடத்துவார்கள் என கோவில்நிர்வாக குழு உறுப்பினர் பாபு நம்பூதிரி தெரிவித்துள்ளார்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil