'வெட்கமே இல்லையா? இதுதான் சுதந்திரமா?' பிரபல கிளாமர் நடிகையை விளாசித் தள்ளிய நெட்டிசன்ஸ்!

By

மும்பை: பிரபல நடிகை வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படத்தை நெட்டிசன்ஸ் விளாசித் தள்ளியுள்ளனர்.

தமிழில், அன்பே ஆருயிரே படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர், பிரபல மாடல் நிலா.

இந்தப் படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்கி இருந்தார். இதில் கவனிக்கப்பட்ட நிலாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன.

ஒரிஜினல் பெயர்

ஒரிஜினல் பெயர்

பிரசாந்தின் ஜாம்பவான், சிபி ராஜின் லீ, அர்ஜூனின் மருதமலை, கில்லாடி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ள இவர், பிறகு தனது ஒரிஜினல் பெயரான மீரா சோப்ரா என்ற பெயரில் நடிக்கத் தொடங்கினார். இந்தியிலும் நடித்து வருகிறார்.

ஜோடியாக நஸ்திக்

ஜோடியாக நஸ்திக்

இடையில் சில வருடங்கள் நடிக்காமல் இருந்த மீரா, மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் செக்‌ஷன் 375 என்ற இந்தி படம் வெளியாகி இருந்தது. இப்போது அர்ஜுன் ராம்பால் ஜோடியாக நஸ்திக் என்ற படத்தில் நடித்துள்ளார். இதன் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.

மன்னாரா சோப்ரா

மன்னாரா சோப்ரா

இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா, பரினீதி சோப்ரா, மன்னாரா சோப்ரா ஆகியோரின் உறவினர் இவர். சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். கடந்த சில மாதங்களுக்கு முன், ஊரடங்கு தளர்வுகள் பற்றி, அவர் வெளியிட்ட பதிவு பரபரப்பனது.

பாதுகாப்பானது அல்ல

பாதுகாப்பானது அல்ல

அதில், கோவிட்-19 மனிதர்களை கொன்று கொண்டிருக்கும் நிலையில் தளர்வுகள் செய்யப்படுகின்றன. அது பாதுகாப்பானது அல்ல. மிகவும் அவசியம் இருந்தால் மட்டுமே மக்களை சந்தியுங்கள். தயவு செய்து மாஸ்க் அணியுங்கள் என்று கூறியிருந்தார்.

தூக்கலான கவர்ச்சி

தூக்கலான கவர்ச்சி

அடிக்கடி, தனது புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்யும் மீரா சோப்ரா, இப்போது கிளாமரான போட்டோவை பதிவு செய்துள்ளார். கொஞ்சம் தூக்கலான கவர்ச்சியாக இருக்கும் இந்த புகைப்படத்துக்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிலர் கடுமையாக விளாசியுள்ளனர்.

அற்புத சுதந்திரம்

அற்புத சுதந்திரம்

இதற்கு கேப்ஷனாக, 'மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி உண்மையிலேயே கண்டுகொள்ளாமல் இருந்தால், நீங்கள் அற்புதமான சுதந்திரத்தை அடைந்துவிட்டீர்கள் என்று அர்த்தம் எனக் கூறியுள்ளார். சில நெட்டிசன்ஸ், இப்படி போஸ் கொடுக்கறதுதான் அந்த சுதந்திரமா எனக் கேட்டுள்ளனர்.

Recommended Video

SHORT HAIR SWEETIES| HEROINES WITH SHORT HAIR| FILMIBEAT TAMIL
வெட்கம் இல்லையா?

வெட்கம் இல்லையா?

உங்களுக்கு வெட்கமே இல்லையா? என்று சிலர் கடுமையாக விளாசியுள்ளனர். பலர் கேப்ஷனும் போட்டோவும் அழகாக இருக்கிறது என்றும் அவர் அழகை வர்ணித்தும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். மீரா சோப்ராவின் இந்த போட்டோ வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X