twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனா வைரஸூக்கு நண்பரின் அப்பா, அம்மா பலி.. 'கண்டிப்பா மாஸ்க் அணியுங்க..' அப்செட் நடிகை அட்வைஸ்!

    By
    |

    சென்னை: கொரோனாவால் தனது நண்பர் அவருடைய பெற்றோரை இழந்துவிட்டதாகவும் தேவை இருந்தால் மட்டும் வெளியே செல்லுங்கள் என்றும் பிரபல நடிகை கூறியுள்ளார்.

    Recommended Video

    தமிழ் சினிமா இவரை ஏன் கொண்டாடவில்லை ? | vijayakanth | History Book Episode-01 | Filmibeat tamil

    கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள், இதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இந்தத் தொற்று காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே செல்கிறது.

    வட சென்னையின் அடையாளம்.. 'இன்றே கடைசி'யானது பழமையான அகஸ்தியா தியேட்டர்.. ரசிகர்கள் வருத்தம்!வட சென்னையின் அடையாளம்.. 'இன்றே கடைசி'யானது பழமையான அகஸ்தியா தியேட்டர்.. ரசிகர்கள் வருத்தம்!

    தீவிர நடவடிக்கை

    தீவிர நடவடிக்கை

    இதைக் கட்டுப்படுத்த அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இருந்தும் முடியவில்லை. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.53 கோடியாக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8.50 லட்சமாக அதிகரித்து இருக்கிறது. கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1.77 கோடியாக இருக்கிறது.

    நடிகை ஜெனிலியா

    நடிகை ஜெனிலியா

    இந்த கொரோனா தொற்று பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை. நடிகர் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், நடிகைகள் நவ்நீத் கவுர், ஜெனிலியா, நடிகர் விஷால், இயக்குனர் ராஜமவுலி உள்பட பலருக்கும் கொரோனா தொற்று பாதித்தது. பிறகு அவர்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டு இந்த தொற்றில் இருந்து மீண்டனர்.

    நடிகை மீரா சோப்ரா

    நடிகை மீரா சோப்ரா

    இந்நிலையில், நடிகை மீரா சோப்ரா இந்த உயிர் கொல்லி கொரோனா தனது நண்பர், பெற்றோரை கொன்றுவிட்டதாகவும் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் கூறியுள்ளார். இவர், தமிழில் நிலா என்ற பெயரில், எஸ்.ஜே.சூர்யார் ஜோடியாக, அன்பே ஆருயிரே படம் மூலம் அறிமுகமானார். பிரசாந்தின் ஜாம்பவான், சிபி ராஜின் லீ, அர்ஜூனின் மருதமலை, கில்லாடி உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

    செக்‌ஷன் 375

    செக்‌ஷன் 375

    தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ள இவர், பிறகு தனது ஒரிஜினல் பெயரான மீரா சோப்ரா என்ற பெயரில் நடிக்கத் தொடங்கினார். இந்தியிலும் நடித்து வந்த இவர், சிறிது காலம் அதிக படங்களில் நடிக்காமல் இருந்தார். இப்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் 'செக்‌ஷன் 375' என்ற இந்தி படம் வெளியாகி இருந்தது.

    தாய், தந்தையை இழந்தார்

    தாய், தந்தையை இழந்தார்

    அவர் தனது ட்விட்டரில், என் நண்பர் ஒருவர் கோவிட்-19 காரணமாக தனது பெற்றோரை சில நாட்களுக்கு முன் இழந்துவிட்டார். முதலில் தாயை இழந்தார். நேற்று (நேற்று முன்தினம்) தந்தையை இழந்துள்ளார். இது அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. கோவிட்-19 மனிதர்களை கொன்று கொண்டிருக்கும் நிலையில் தளர்வுகள் செய்யப்படுகின்றன.

    மாஸ்க் அணியுங்கள்

    மாஸ்க் அணியுங்கள்

    அது பாதுகாப்பானது அல்ல. மிகவும் அவசியம் இருந்தால் மட்டுமே மக்களை சந்தியுங்கள். தயவு செய்து மாஸ்க் அணியுங்கள். இவ்வாறு கூறியுள்ளார். முன்னதாக, 'ஒடிடியில் வெளியாகும் படங்களை பார்ப்பதில் எந்த உற்சாகமும் இல்லை. அதனால் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை ஓடிடியில் வெளியிடுவதற்கு பதிலாக தியேட்டர்கள் திறக்கும்வரை காத்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

    English summary
    Actress Meera Chopra is upset after her friend lost both his parents to the deadly Covid-19.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X