twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பெங்களூர் பெண் மிரட்டல் எதிரொலி: பலத்த பாதுகாப்புடன் நடந்த மீரா ஜாஸ்மின் திருமணம்

    |

    சென்னை: திருமணத்தில் வந்து பிரச்சினை செய்வேன் என பெங்களூர் பெண் ஒருவர் போனில் மிரட்டல் விடுத்ததையடுத்து, பலத்தப் பாதுகாப்புடன் இன்று மீரா ஜாஸ்மின் திருமணம் இனிதே நடைபெற்றது.

    ரன், சண்டக்கோழி, நேபாளி இங்க என்ன சொல்லுது உள்பட பல வெற்றிப் படங்களில் நடித்திருப்பவர் நடிகை மீராஜாஸ்மின். கேரளாவை சேர்ந்த இவர் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார்.

    மற்ற நடிகைகளைப் போலவே காதல், திருமணம் என்ற வதந்திகளில் சிக்கிய மீரா ஜாஸ்மினுக்கு சமீபத்தில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அனில்ஜான் டைட்டஸ் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப் பட்டது. இது பெற்றோர் நடத்தி வைக்கும் திருமணம் என மீரா ஜாஸ்மின் தெரிவித்திருந்தார். திருவனாந்தபுரத்தை சேர்ந்த டைட்டஸ்-சுகதகுமாரி தம்பதிகளின் மகனான அனில்ஜான், துபாயில், 'சாப்ட்வேர்' என்ஜினீயராக இருக்கிறார்.

    இதற்கிடையே திருமணத்தில் வந்து பிரச்சினை செய்வேன் என பெங்களூர் பெண் ஒருவர் மிரட்டல் விடுத்ததால், மீரா ஜாஸ்மின் திருமணத்திற்குப் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

    பதிவுத் திருமணம்...

    பதிவுத் திருமணம்...

    கடந்த 9ம் தேதி மீராஜாஸ்மின் - அனில்ஜான் இருவருக்கும் பதிவு திருமணம் நடந்தது. பதிவு திருமணம் எர்ணாகுளம் சிலவனூரில் நடைபெற்றது. இதற்காக எர்ணாகுளம் சார்பதிவாளர் அனில் அவரது வீட்டுக்கே சென்று திருமணத்தை சட்டப்படி பதிவு செய்தார்.நிகழ்ச்சியில் இரு வீட்டைச் சேர்ந்த நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

    திருமணம் முடிந்தது...

    திருமணம் முடிந்தது...

    அதன் தொடர்ச்சியாக, மீராஜாஸ்மின்-அனில்ஜான் டைட்டஸ் திருமணம், இன்று திருவனந்தபுரத்தில் உள்ள எல்.எம்.எஸ். கிறிஸ்தவ தேவாலயத்தில் காலை 11 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது.

    பெங்களூர் பெண்...

    பெங்களூர் பெண்...

    இதற்கிடையே, மணமகன் அனில்ஜானுக்கு பெங்களூர் பெண் ஒருவர் போனில் மிரட்டல் விடுத்து வந்தார். அதனைத் தொடர்ந்து அனில்ஜான் நேற்று கேரள உயர்நீதி மன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்தார்.

    போனில் மிரட்டல்...

    போனில் மிரட்டல்...

    அதில் எனக்கும் நடிகை மீரா ஜாஸ்மினுக்கும் பிப்ரவரி 12ம் தேதி சர்ச்சில் திருமணம் நடக்கிறது எனது மனைவி என கூறி பெங்களூரை சேர்ந்த ஒரு பெண் எனக்கு மிரட்டல் விடுக்கிறார். திருமணம் நடைபெறும் இடத்துக்கே வந்து தகராறு செய்வேன் என கூறுகிறார். எனவே எனது திருமணத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

    பலத்த பாதுகாப்பு....

    பலத்த பாதுகாப்பு....

    அனில் ஜானின் மனுவை விசாரித்த நீதிபதி, அவர்களது திருமணத்துக்கு தக்க பாதுகாப்பு அளிக்கும் படி, போலீசுக்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற மீரா ஜாஸ்மின் -அனில் ஜான் திருமணம் நடைபெற்ற ஆலயத்தின் உள்ளேயும் வெளியேயும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    English summary
    Meera Jasmine's marriage with Dubai engineer Anil John Titus happened safely in Tiruvananthapuram church with full police protection.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X