»   »  எப்படி இருந்த மீரா ஜாஸ்மின் இப்படி ஆகிட்டாரே... ஷாக் ஆன ரசிகர்கள்!

எப்படி இருந்த மீரா ஜாஸ்மின் இப்படி ஆகிட்டாரே... ஷாக் ஆன ரசிகர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
எப்படி இருந்த மீரா ஜாஸ்மின் இப்படி ஆகிட்டார்- ரசிகர்கள் ஷாக்

சென்னை : 'சண்டக்கோழி', 'ரன்' ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் மீரா ஜாஸ்மின். இவர் விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்துப் பெயர் பெற்றவர்.

பிறகு தனக்கு மார்க்கெட் குறைவதை அறிந்து அவரே சினிமாவை விட்டு விலகி, திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நகைக்கடையில் மீரா ஜாஸ்மினை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். எளிதில் அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் எடை அதிகரித்துள்ளது.

மீரா ஜாஸ்மின்

மீரா ஜாஸ்மின்

சில வருடங்களுக்கு முன்பு வரை தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் கொடிகட்டி பறந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். 'சண்டக்கோழி', 'ரன்' உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த இவர் 'புதிய கீதை' படத்தில் விஜய்யுடனும், 'ஆஞ்சநேயா' படத்தில் அஜித்துடனும் நடித்துள்ளார்.

தேசிய விருது பெற்ற நடிகை

தேசிய விருது பெற்ற நடிகை

தமிழில் கடைசியாக, சந்தானம், விடிவி கணேஷ் ஆகியோர் நடித்த 'இங்க என்ன சொல்லுது' படத்த்திலும், விஞ்ஞானி எனும் படத்திலும் நடித்திருந்தார். தேசிய விருது, தமிழ்நாடு மற்றும் கேரளா அரசுகளின் மாநில விருதுகளையும் பெற்றிருக்கிறார் மீரா ஜாஸ்மின்.

திருமணம்

திருமணம்

கடந்த 2014-ம் வருடம் இவர் திருமணம் செய்துகொண்டாலும் கூட, மற்ற சில நடிகைகளைப்போல சினிமாவை விட்டு முழுவதுமாக ஒதுங்கிவிடாமல் அவ்வப்போது ஒன்றிரண்டு படங்களில் தலைகாட்டி வருகிறார்.

நீராளி படத்தில் நடிப்பதாக வதந்தி

நீராளி படத்தில் நடிப்பதாக வதந்தி

பாலிவுட் இயக்குனர் அஜய் வர்மா என்பவர் இயக்கத்தில் மோகன்லால் நடித்துவரும் 'நீராளி' படத்தில் அவருக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இந்த தகவலை படக்குழுவினர் மறுத்துள்ளனர்.

ஆளே மாறிய மீரா ஜாஸ்மின்

ஆளே மாறிய மீரா ஜாஸ்மின்

இந்நிலையில் தான் மீரா ஜாஸ்மின் எடை அதிகரித்து தோற்றமளிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது ஒரு நகைக்கடையில் எடுக்கப்பட்ட புகைப்படம். எப்படி இருந்த மீரா ஜாஸ்மின் இப்படி ஆகிட்டார் என ரசிகர்கள் ஷாக் ஆகிறார்கள்.

English summary
Meera Jasmine, who has attracted the audience through films like 'Sandakozhi' and 'Run'. He has acted with lead actors like Vijay and Ajith. In this case, the fans who saw Recently Meera Jasmine and shocked. She has increased her body weight.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil