சாதியை குறிப்பிட்டு ஓவர் பேச்சு.. 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.. விரைவில் கைதாகும் மீரா மிதுன்!

சென்னை: நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சர்ச்சைகளுக்கும் சண்டைகளுக்கும் பெயர் போனவர் மீரா மிதுன். மாடலான இவர் ஃபெமினாஸ் தென்னிந்திய அழகிப் போட்டியில் வென்றார். ஆனால் அதில் வயதை தவறாக காட்டியதாலும் திருமணம் ஆனதை மறைத்ததாலும் அவருக்கு அளிக்கப்பட்ட அழகிப்பட்டம் திரும்பப்பெறப்பட்டது.

8 மாத குழந்தையை இதய நோயிலிருந்து மீட்க உதவுங்களேன் ப்ளீஸ்

இருப்பினும் தன்னை மிஸ் சவுத் இந்தியா என சொல்லிக் கொள்ளும் மீரா மிதுன் எட்டு தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்தார். இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

சேரன் மீது குற்றம்சாட்டிய மீரா மிதுன்

சேரன் மீது குற்றம்சாட்டிய மீரா மிதுன்

இதில் சக போட்டியாளர்களிடம் எப்போதும் சண்டை வாக்குவாதம் என இருந்த மீரா மிதுன், இதன் உச்சக்கட்டமாக இயக்குநர் சேரன் தன்னை தவறான எண்ணத்தில் தொட்டதாக கூறி குண்டை தூக்கிப்போட்டார். மீரா மிதுனின் இந்த குற்றச்சாட்டால் கமலே அதிர்ந்து போனார்.

பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்ட மீரா மிதுன்

பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்ட மீரா மிதுன்

மீரா மிதுன் சொன்னது பச்சை பொய் என்பதை குறும்படம் போட்டு தோலுரித்தார் நடிகர் கமல்ஹாசன். நிகழ்ச்சியிலேயே மீரா மிதுன் சொன்னதை பொய் என்றறிந்த நெட்டிசன்கள், நிகழ்ச்சியில் அவருக்கு வாக்களிக்காமல் புறக்கணித்தனர். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் மீரா மிதுன்.

சர்ச்சையை கிளப்பிய மீரா மிதுனின் ஆடியோக்கள்

சர்ச்சையை கிளப்பிய மீரா மிதுனின் ஆடியோக்கள்

வெளியே வந்த பிறகும் அடங்காத அவர், தன்னுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சக ஹவுஸ்மேட்டுகளை விளாசி தள்ளினார். மேலும் இயக்குநர் சேரனின் பெயரை டேமெஜ் செய்ய நண்பர் ஒருவருடன் அவர் போனில் பேசிய ஆடியோக்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இதேபோல் முகேன் ராவுடன் தான் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களையும் வீடியோக்களையும் வைரலாக்க கோரியும் அவர் தனது நண்பர்களுடன் பேசிய ஆடியோக்களும் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியது.

கமலையும் விமர்சித்த மீரா மிதுன்

கமலையும் விமர்சித்த மீரா மிதுன்

தொடர்ந்து நடிகர் கமல் ஹாசனையும் கன்னாபின்னாவென விமர்சித்தார் மீரா மிதுன். கமலின் குடும்பம் தான் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்துவதாக குற்றம்சாட்டிய மீராமிதுன், தனக்கு வந்த வாய்ப்புகளையெல்லாம் நடிகர் கமல் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தன்னுடைய மகள்களுக்கு பெற்று கொடுத்துவிட்டார் என்றும் கூறி வாய்க்கு வந்தபடி பேசினார்.

தனக்கு பாலிவுட்தான் சரியாக வரும்

தனக்கு பாலிவுட்தான் சரியாக வரும்

தொடர்ந்து தமிழ் சினிமாவே தனக்கு வேண்டாம், தன் ரேஞ்சுக்கு பாலிவுட்தான் சரியாக வரும் என்று பாலிவுட்டுக்கு சென்றார் மீரா மிதுன். ஆனால் போன வேகத்தில் மீண்டும் சென்னைக்கு திரும்பிய மீரா மிதுன், தமிழ் சினிமா பிரபலங்கள் பலரையும் தரக்குறைவாக விமர்சித்து வீடியோ வெளியிட்டார். இயக்குநர்கள் பாரதிராஜா, பாண்டிராஜ், நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா என பலரையும் விமர்சித்தார்.

ஆபாசமாக பேசிய மீரா மிதுன்

ஆபாசமாக பேசிய மீரா மிதுன்

மேலும் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா, சூர்யாவின் மனைவி நடிகை ஜோதிகா என பலரையும் தரம் தாழ்ந்து விமர்சித்த மீரா மிதுன், இருவரின் மனைவியையும் ஆபாசமாக பேசினார். இதனால் கடுப்பான அவர்களின் ரசிகர்கள் பதிலுக்கு மீரா மிதுனை வச்சு செய்தனர். அவரை ஆபாச வார்த்தைகளால் அர்ச்சித்த அவர்கள் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி கதறவிட்டனர். இதனை தொடர்ந்து மீரா மிதுன் நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யாவிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டார்.

எல்லா நடிகைகளும் தன்னை காப்பியடிக்கிறார்கள்

எல்லா நடிகைகளும் தன்னை காப்பியடிக்கிறார்கள்

தொடர்ந்து ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை அனைத்து நடிகைகளும் தன்னையே காப்பியடிக்கிறார்கள் என பாலிவுட் நடிகை கியாரா அத்வானி முதல் கோலிவுட்டில் த்ரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா ஆனந்த் என அனைவரின் மீதும் குற்றம் சாட்டி வாங்கி கட்டிக் கொண்டார் மீரா மிதுன். இந்நிலையில் சமீபத்தில் நடிகை மீரா மிதுன் வீடியோ ஒன்றை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

குறிப்பிட்ட சாதியினர் குறித்து சர்ச்சைப் பேச்சு

குறிப்பிட்ட சாதியினர் குறித்து சர்ச்சைப் பேச்சு

அந்த வீடியோவில் குறிப்பிட்ட சமூகப் பிரிவினரை குறிவைத்து அந்தப் பிரிவைச் சேர்ந்த இயக்குநர்கள், நடிகர், நடிகைகளை குறித்து ஆபாசமாக பேசியும், அவர்களை திரைத்துறையில் இருந்து அகற்றுவது அவசியம் எனவும் கூறியிருந்தார் நடிகை மீரா மிதுன். மேலும் அப்பிரிவைச் சேர்ந்த அனைவரும் குற்றப் பின்னணி உடையவர்களாக இருப்பதால்தான் அவர்களை அனைவரும் தூற்றுகின்றனர் எனவும் தெரிவித்திருந்தார்.

மீரா மிதுன் மீது புகார்

மீரா மிதுன் மீது புகார்

இது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. நடிகை மீரா மிதுனின் இப்பதிவிற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. பல்வேறு கட்சியினர் மற்றும் அரசியல் சாரா இயக்கங்களை சேர்ந்தவர்கள் தமிழகத்தின் பல காவல் நிலையங்களில் மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க புகார் அளித்திருந்தனர்.

ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

இந்த நிலையில் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி வன்னியரசு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு - சைபர் கிரைம் போலீசார் நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், கலகம் செய்ய தூண்டிவிடுதல், சாதி மதம் குறித்துப் பேசி கலகம் செய்ய முயற்சித்தல் உட்பட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மீரா மிதுன் விரைவில் கைது

மீரா மிதுன் விரைவில் கைது

இதனால் விரைவில் நடிகை மீரா மிதுன் கைது செய்யப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தொழில் அதிபர் ஜோ மைக்கேல் புகாரின் பேரில் நடிகை மீரா மிதுன் மீது மோசடி மற்றும் கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு பல்வேறு வழக்குகள்

கடந்த ஆண்டு பல்வேறு வழக்குகள்

கடந்த ஆண்டு நடிகர் விஜய் அவரது மனைவி சங்கீதா, நடிகர் சூர்யா உள்ளிட்ட திரை பிரபலங்களை அவதூறாக பேசியதற்காக அவர்களின் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் உள்ள பல காவல் நிலையங்களில் புகார் கொடுத்தனர். அந்த வகையில் சென்னை எம்.கே.பி காவல்துறையினர் மீரா மிதுன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ததும், அதே போல சமூக வலைதளங்களில் தனிநபர் தாக்குதல் நடத்தியதாக கேரளாவில் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X