அஜித் குறித்து 'அப்படி' பேசி சர்ச்சையை கிளப்பிய பிக்பாஸ் நடிகை.. கிழித்து தொங்கவிட்ட நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகர் அஜித்தை மரியாதை இல்லாமல் பேசிய சர்ச்சை நடிகையை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

Recommended Video

தல அஜித்தை மரியாதை இல்லாமல் பேசிய Meera Mithun

நடிகை மீரா மிதுன் பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இயக்குநர் சேரன் மீது அபாண்டமான குற்றச்சாட்டை கூறி பெரும் பிரபலமானார்.

தொடர்ந்து தமிழக அரசு, முதல்வர், அமைச்சர்கள் என பலர் மீதும் அவதூறு பேசி வருகிறார். இதனால் சமூக வலைதளங்களில் அதிகம் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

கணக்கை முடக்கனும்

கணக்கை முடக்கனும்

அரசு குறித்து அவதூறாக பேசும் அவரை கைது செய்ய வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் மோசமான கவர்ச்சி போட்டோக்களை ஷேர் செய்து வருவதால் கடுப்பான நெட்டிசன்கள் அவரது சமூக வலைதள கணக்கை முடக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

காண்டான ரசிகர்கள்

காண்டான ரசிகர்கள்

இந்நிலையில் நடிகர் அஜித்தை அவமதிக்கும் வகையில் மீரா மிதுன் பதிவிட்டிருப்பதாக அவரது ரசிகர்கள் காண்டாகி இருக்கின்றனர். அதாவது என்னை அறிந்தால் படத்தில் தான் நடித்த ஒரு காட்சியின் போட்டோவை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார்.

ஸ்கிரீனில் வரவில்லை

ஸ்கிரீனில் வரவில்லை

அதில் நடிகர் அஜித்துக்கு பின்னால் பெண்கள் கூட்டத்தில் ஒருவராக நின்றுகொண்டிருக்கிறார் மீரா மிதுன். அந்த போட்டோவை வெளியிட்டு.. பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஜித் .. நீங்கள் என்னை நினைவில் வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன் .. ஆமாம் எனது முதல் படம் தல அஜித் தான் தவிர வேறு யாருடனும் இல்லை, துரதிர்ஷ்டவசமாக நான் நடித்த காட்சிகள் திரையில் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

கை வலிச்சுருமோ?

கை வலிச்சுருமோ?

இதனை பார்த்த நெட்டிசன்கள் செம காண்டாகி உள்ளனர். ஒரு சார் கூட போட முடியாதோ? கை வலிச்சுருமோ? அவர பேர சொல்லி கூப்பிடுற அளவுக்கு நீங்க ஒன்னும் பெரிய ஆள் இல்ல.. நீங்க அவர மதிக்கலன்னா நாங்க எல்லாரும் உங்களை ஏன் மரியாதை இல்லாம பேசக்கூடாது? என கேட்டு விளாசியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

தகுதி இல்லாத ஆள்

தகுதி இல்லாத ஆள்

நீங்கள் நடித்த காட்சிகள் திரையில் வராதது துரதிர்ஷ்டம் இல்லை. அதிர்ஷ்டவசமாக அது ஸ்கிரீனில் வரவில்லை என கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன். மற்றொரு நெட்டிசனான இவர் அஜித்துன்னு பேர் சொல்லி கூப்பிடுற மரியாதை இல்லாம.. நீங்க எல்லாம் அவரு பேர சொல்ல தகுதி இல்லாத ஆள்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கனும் என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

விஜய் ரசிகர்கள் கண்டனம்

விஜய் ரசிகர்கள் கண்டனம்

மற்றொரு நெட்டிசனான இவர் மரியாதையா பேசுங்க.. அவரு லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு இன்ஸ்பையரேஷன் என குறிப்பிட்டுள்ளார். விஜய் ரசிகர்கள் பலரும் அஜித் குறித்த மீரா மிதுனின் இந்த டிவிட்டுக்கு கண்டம் தெரிவித்து விளாசியிருக்கின்றனர்.

உங்க தம்பியா?

உங்க தம்பியா?

அஜித்தா?? எவ்ளோ பெரிய லெஜன்ட்லாம் அஜித் சார், தலன்னு சொல்றாங்க.. ஓவர் ஹெட் வெயிட் என சாடியிருக்கிறார் இந்த நெட்டிசன். இன்னும் சில நெட்டிசன்கள் அவரு என்ன உங்க தம்பியா என கேட்டு திட்டி தீர்த்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X