சீக்கிரம் வருத்தப்படுவீங்க.. மீண்டும் சேரனை சீண்டும் மீரா மிதுன்! கடுப்பான ரசிகர்கள்!

Recommended Video

Super Model Meera Mithun glamorous video

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது சேரனிடம் வம்பிழுத்த மீரா மிதுன் தற்போது மீண்டும் அவரை சீண்டியுள்ளார்.

அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற மீரா மிதுன் சக போட்டியாளராக பங்கேற்ற இயக்குநர் சேரன் தன்னை தவறான எண்ணத்தில் தொட்டு தூக்கியதாக குற்றம்சாட்டினார்.

மீரா மிதுனின் இந்த குற்றச்சாட்டு பார்வையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சேரன் மீதான மீராவின் குற்றச்சாட்டை கேட்டு ஒட்டு மொத்த திரைத்துறையும் அதிர்ச்சியடைந்தது.

குற்றச்சாட்டு பொய்

குற்றச்சாட்டு பொய்

ஏன்.. மீராவின் குற்றச்சாட்டால் நிகழ்ச்சி தொகுப்பாளரான கமலே சற்று அதிர்ச்சியானார். இதுதொடர்பாக விசாரித்த கமல், குறும்படம் மீரா, சேரன் மீது சுமத்திய குற்றச்சாட்டு அபாண்டமானது பொய்யானது என நிரூபித்தார்.

எதிர்மறை

எதிர்மறை

இதனை தொடர்ந்து மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகும் மீராவுக்கு எல்லாமே எதிர்மறையாக நடைபெற்று வருகிறது.

விளாசும்

விளாசும்

ஏற்கனவே அவர் நடித்த படத்தில் இருந்து அவரின் காட்சிகள் நீக்கப்பட்டன. புதிய படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இந்நிலையில் பாலிவுட்டில் நடிக்கப்போவதாக மும்பை சென்றுள்ள மீரா மிதுன் டிவிட்டரில் இருந்தபடியே, கமல்ஹாசன், சேரன் என ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையும் விளாசி வருகிறார்.

அப்படியொரு தாக்கம்

அப்படியொரு தாக்கம்

இந்நிலையில் விஜய் டிவியில் பிக்பாஸ் போட்டியாளர்களை வைத்து ஒளிபரப்பாகும் வீ ஆர் த பாய்சு ஊஊஊ என்ற நிகழ்ச்சியின் புரமோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ரீடிவிட் செய்த மீரா, பாப்புலரான வீஆர்த பாய்ஸை புரமோட் செய்யக் கூட விஜய் டிவிக்கு பிக்பாஸ் வீட்டில் நான் இருந்த வீடியோக்கள் தேவைப்படுகிறது. 35 நாட்களில் அப்படியொரு தாக்கத்தை நான் ஏற்படுத்தியிருக்கிறேன்.

சேரன் நீங்கள் வருத்தப்படுவீர்கள்

சேரன் உங்களுக்கு நன்றாக தெரியும் நான் வெளிப்படையாக சொல்ல முடியாததை தடுக்க முயற்சி செய்தீர்கள்.. நீங்கள் விரைவில் வருத்தப்படுவீர்கள்.. இவ்வாறு மீரா மிதுன் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

திட்டும் நெட்டிசன்ஸ்

மீரா மிதுனின் இந்த டிவிட்டை பார்த்த நெட்டிசன்கள் திருந்தாத ஜென்மம் போல என திட்டி தீர்த்து வருகின்றனர்.

அவரை ஏன் இழுக்கிறீங்க?

சேரன் சாரை ஏன் இங்கே இழுக்கிறீங்க இந்த முட்டாள்தனமான ட்வீட்டுகளுக்குப் பதிலா வெளிப்படையாகச் சொல்லுங்கள். மேலும் தவறான குற்றச்சாட்டுகளின் விளைவுகளை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X