என்ன.. தர்ஷன் அண்ணா.. மீரா அண்ணியா.. ஆண்டவன் அல்ரெடி முடிச்சு போட்டுட்டான்.. தீயாய் பரவும் வீடியோ!

Recommended Video

Sanam Shetty Reveals about Tharshan | Sanam Interview | Bigg Boss 3 | Throwback

சென்னை: சனம் ஷெட்டியுடன் தர்ஷனின் காதல் பிரேக்கப் ஆகியுள்ள நிலையில் மீரா மிதுனுடன் இணைத்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தர்ஷன். இலங்கையை சேர்ந்த மாடலான தர்ஷன், சனம் ஷெட்டியுடன் சில விளம்பர படங்களில் நடித்துள்ளார்.

இதன் மூலம் தொடங்கிய அவர்களின் நட்பு பின்பு காதலாக மாறியது. சனம் ஷெட்டியும் தர்ஷனும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.

புகார்

புகார்

தர்ஷன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோதுதான் அவருடைய காதலி சனம் என தெரிய வந்தது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பாக தர்ஷனுக்கும் சனம் ஷெட்டிக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்த விஷயம் சனம் அண்மையில் தர்ஷன் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்த போதுதான் மீடியாக்களுக்கு தெரியவந்தது.

மிரட்டல்

மிரட்டல்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தர்ஷன் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதாக கூறிய சனம், தன்னை திருமணம் செய்ய தர்ஷன் மறுப்பதாகவும் குற்றம்சாட்டினார். இந்த விவகாரம் பெரும் பூதாகரமாகியுள்ளது. சனத்தின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த தர்ஷன், சனம்தான் தனக்கு தற்கொலை மிரட்டல் விடுத்தாக கூறினார்.

முடியாது

முடியாது

மேலும் தன்னை பற்றி தயாரிப்பாளர்களிடம் தவறாக பேசி தனக்கு வந்த மூன்று படங்களின் வாய்ப்பையும் கெடுத்து விட்டார். இதனால் தான் அவருடனான காதலை முறித்துக்கொள்ள முடிவு செய்ததாகவும் கூறினார். மேலும் சனம் ஷெட்டியை இனிமேல் திருமணம் செய்து கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.

ட்ரோல் வீடியோ

இதனால் இருவருக்கும் இடையிலான காதல் முறிந்துவிட்டதாக அறியப்படுகிறது. இந்நிலையில் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல ட்ரோல் வீடியோ ஒன்றை வைரலாக்கி வருகின்றனர் நெட்டிசன்கள். அதில் பிக்பாஸ் வீட்டில் மீரா மிதுனும் தர்ஷனும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து ஆறுதல் கூறிகொள்வதாக உள்ளது அந்த வீடியோ.

முடிச்சு போட்டுட்டான்

மேலும் ட்ரூ லவ் நெவர் ஃபெய்ல்டு என்றும் தர்ஷன் அண்ணா மீரா அண்ணி என்றும் குறிப்பிட்டிருக்கின்றனர். ஆண்டவன் அல்ரெடி முடிச்சு போட்டுட்டான் தர்ஷனும் மீராவும்தான் என்று எனவும் குறிப்பிட்டுள்ளனர் நெட்டிசன்கள். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

வைரல் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மீரா மிதுன், தர்ஷனிடம் தனது காதலை சொன்னார். மேலும் எனக்கு உன்னை பிடித்திருக்கிறது எங்கள் அம்மாவிடம் வந்து பேசு என்றும் மீரா மிதுன் தர்ஷனிடம் கூறினார். ஆனால் வெளியே தனக்கு காதலி இருப்பதாக கூறி நழுவினார் தர்ஷன். இந்நிலையில் அந்த காதல் முறிந்துள்ளதால் இந்த வீடியோவை ட்ரோல் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X